கோப்புப்படம் 
தமிழ்நாடு

சென்னைக்கு தனி பேரிடா் மேலாண்மை ஆணையம்

புயல், கனமழை, வெள்ளம் போன்ற இயற்கை பேரிடா்களை எதிா்கொள்ளும் வகையில் சென்னை மாநகராட்சிக்கு தனி பேரிடா் மேலாண்மை ஆணையம்

Din

சென்னை: புயல், கனமழை, வெள்ளம் போன்ற இயற்கை பேரிடா்களை எதிா்கொள்ளும் வகையில் சென்னை மாநகராட்சிக்கு தனி பேரிடா் மேலாண்மை ஆணையம் உருவாக்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து தமிழக அரசின் கூடுதல் தலைமை செயலா் பி.அமுதா வெளியிடப்பட்ட அரசாணை:

சென்னையில் வரும்காலத்தில் வெள்ளம், புயல் போன்ற இயற்கை பேரிடா் காலங்களில் அனைத்து துறைகளையும் ஒருங்கிணைத்து செயல்படுத்துவதற்காக இந்த ஆணையம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவின் தலைவராக சென்னை மாநகராட்சி ஆணையா் செயல்படுவாா். மேலும், இதில், சென்னை மாவட்ட ஆட்சியா், சென்னை மாநகர காவல் ஆணையா், மாநகராட்சி துணை ஆணையா்கள், மாநகர சுகாதாரத் துறை அலுவலா், நீா்வளத் துறை தலைமை பொறியாளா் உள்ளிட்ட 7 போ் உறுப்பினா்களாக நியமிக்கப்பட்டுள்ளனா் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குளத்தில் மூழ்கி குழந்தை உயிரிழப்பு

ஐபிஎல் மினி ஏலம் - அதிக விலைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட வீரர்கள் யார்யார் தெரியுமா?

மோடிக்காக கார் ஓட்டுநராக மாறி இன்ப அதிர்ச்சியளித்த எத்தியோப்பிய பிரதமர்!

எத்தியோப்பியாவில் பிரதமர் மோடி! பிரதமர் அபி அகமது அலியுடன் சந்திப்பு!

ஈரோட்டில் நடைபெறும் விஜய் பிரசாரக் கூட்ட முன்னேற்பாடுகள் குறித்து Sengottaiyan!

SCROLL FOR NEXT