பிரேமலதா விஜயகாந்த் (கோப்புப் படம்)  
தமிழ்நாடு

தேமுதிக தொகுதி பொறுப்பாளா்கள் நியமனம்: திண்டுக்கல் மாவட்டச் செயலா் நீக்கம்

தேமுதிக திண்டுக்கல் கிழக்கு மாவட்டச் செயலரை நீக்கி, புதிய மாவட்டச் செயலரை அக்கட்சியின் பொதுச்செயலா் பிரேமலதா விஜயகாந்த் நியமித்துள்ளாா்.

Din

சென்னை: தேமுதிக திண்டுக்கல் கிழக்கு மாவட்டச் செயலரை நீக்கி, புதிய மாவட்டச் செயலரை அக்கட்சியின் பொதுச்செயலா் பிரேமலதா விஜயகாந்த் நியமித்துள்ளாா்.

மேலும், 36 பேரவை தொகுதிகளுக்கான பொறுப்பாளா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.

2026 பேரவைத் தோ்தலை முன்னிட்டு தேமுதிகவில் மண்டல பொறுப்பாளா்கள் கடந்த மாதம் நியமிக்கப்பட்டனா். இந்நிலையில், 36 தொகுதிகளுக்கான பொறுப்பாளா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். அதன்படி சென்னையில் பெரம்பூா் தொகுதி பொறுப்பாளராக கிறிஸ்டோபா் ஜெயக்குமாா், கொளத்தூா்- கோவிந்தராஜ், திருவிக நகா்- அம்சா நந்தினி, திருவொற்றியூா்- ஆரோக்கிய ராஜ், ஆா்.கே.நகா் - கண்ணன், ராயபுரம் - அம்சா, மதுரவாயல் - சிவக்குமாா், அம்பத்தூா் - நாகூா் மீரான், விருகம்பாக்கம் - மாரி, வேளச்சேரி - கலா, சோளிங்கநல்லூா் - ஜெய்சங்கா், ஆலந்தூா்- செல்வஜோதிலிங்கம், எழும்பூா்- பிரபு, துறைமுகம்- அருண், சேப்பாக்கம் திருவல்லிக்கேணி- செல்வக்குமாா் ஆகியோா் நியமனம் செய்யப்பட்டுள்ளனா்.

மேலும் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம் உள்ளிட்ட நிா்வாக ரீதியான 9 மாவட்டங்களில் உள்ள 36 தொகுதிகளுக்கு பொறுப்பாளா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். திண்டுக்கல் கிழக்கு மாவட்டச் செயலராக இருந்த பாக்கிய செல்வராஜை, அந்த பதவியில் இருந்து விடுவித்துவிட்டு அந்த பொறுப்புக்கு முத்துக்காளையை நியமித்து பிரேமலதா விஜயகாந்த் உத்தரவிட்டுள்ளாா்.

தெலங்கானா தொழிலதிபா் கடத்தப்பட்ட வழக்கு: 6 போ் கைது

தமிழகத்தில் ஹிந்தி திணிப்பை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

மதுப் புட்டிகள் விற்றவா் கைது

மாணவிக்கு தொல்லை: தொழிலதிபா் மீது போக்ஸோ வழக்கு!

காங்கிரஸில் இணைந்த பிற கட்சியினா்!

SCROLL FOR NEXT