சிசிடிவி காட்சிகள் 
தமிழ்நாடு

மக்களே உஷார்! பிச்சை கேட்பது போல வந்து திருடும் வடமாநில கும்பல்!

திருட்டில் ஈடுபட்ட வடமாநில பெண்களின் சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

DIN

கோவை : பிச்சை கேட்பது போல் வந்து திருடிய வடமாநில பெண்களின் சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கோவை கணபதி அருகே உள்ள அத்திபாளையம் பிரிவு பகுதியில் உள்ள தனியார் பம்ப் கம்பெனியில் பிச்சை கேட்பது போல் வந்த 7 வடமாநில பெண்கள் சுமார் ஒன்றரை லட்சம் மதிப்பு உள்ள கம்பெனியில் இருந்த காப்பர் ஒயர் மற்றும் பித்தளை உலோகங்களை திருடிச் சென்று உள்ளனர்.

இது தொடர்பாக கம்பெனியின் உரிமையாளர் அளித்த புகாரின் பேரில் சி.சி.டி.வி காட்சிகளை வைத்து கோவை சரவணம்பட்டி போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதில் ஒரு பெண்மணி கம்பெனியில் உள்ள பாத்ரூமில் வைக்கப்பட்டு இருந்த பெனாயில் பாட்டிலையும் திருடிச் சென்றது சி.சி.டி.வி. காட்சியில் பதிவாகி உள்ளது.

இதுபோல் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் யாரெனும் சுற்றித் திரிந்தால் போலீஸாருக்கு தகவல் தெரிவிக்குமாறு காவல் துறையினர் அறிவுறுத்தல்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பைசன் காளமாடன் முதல் பாடல் அப்டேட்!

ஹிமாசல் கனமழை: யாத்திரை சென்ற 10 பேர் பலி! 6,000 பக்தர்கள் மீட்பு!

டிபிஎல்: திக்வேஷ் ரதி, நிதீஷ் ராணா உள்பட 5 வீரர்களுக்கு அபராதம்!

உக்ரைன்: ரஷியாவின் தாக்குதலில் முன்னாள் நாடாளுமன்றத் தலைவர் பலி!

ரூ. 300 கோடி வசூலித்த நரசிம்மா!

SCROLL FOR NEXT