முகப்பு
தமிழ்நாடு

கரையைக் கடந்தது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்!

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையைக் கடந்தது தொடர்பாக...

Updated On : 29 மே, 2025 at 11:11 AM
கோப்புப்படம்
பகிர்:

வங்கக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையைக் கடந்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி செவ்வாய்க்கிழமை உருவானது.

இந்த புயல் சின்னம் மேற்கு வங்கம் மற்றும் அதனை ஒட்டிய வங்கதேச கடற்கரை பகுதிகளில் வடமேற்கு வங்கக்கடலில் மையம் கொண்டு இருந்தது.

தொடர்ந்து வடக்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவான நிலையில், மேற்கு வங்கத்திற்கும் வங்க தேசத்துக்கும் இடையே கரையைக் கடந்தது.

இது மேலும் வலுவிழந்து தாழ்வு மண்டலமாக இன்று மாலைக்குள் மாறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: ரிசர்வ் வங்கி கட்டுப்பாடு மாநில கூட்டுறவு வங்கிகளுக்கு பொருந்தாது: அமைச்சர் பெரியகருப்பன்

முழு கட்டுரையைப் படிக்க →