சென்னை : தென்மேற்கு வங்கக் கடலில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழந்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த ஒரு சில மணி நேரமாக மணிக்கு 6 கி.மீ. வேகத்தில் இலங்கையை நோக்கி நகர்ந்து வருகிறது. இது சென்னைக்கு 490 கி.மீ. தொலைவில் தென்கிழக்கிலும், காரைக்காலில் இருந்து 310 கி.மீ. தொலைவில் தென்கிழக்கிலும் நிலை கொண்டுள்ளது.
மேற்கு வட மேற்கு திசையில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நகர்ந்து இலங்கை அருகே கரையை கடக்கும் என்றும், இன்று மாலை யாழ்ப்பாணம் - திரிகோணமலை இடையே கரையைக் கடக்க வாய்ப்பிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்துக்கு மழை உண்டா?
தமிழகத்தைப் பொறுத்தவரை, காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கடலோர மாவட்டங்களில் பலத்த தரைக்காற்று வீசக்கூடும். திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்காலில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
எப்போது உருவானது காற்றழுத்த தாழ்வு?
இந்திய பெருங்கடல் - தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளின் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி ஜன.5-ஆம் தேதி மாலையில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவானது. இது படிப்படியாக வலுப்பெற்று வந்த நிலையில், தெற்கு - தென்கிழக்கு திசையில் நகர்ந்து வியாழக்கிழமை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றிருந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.