மறைந்த நடிகர் ராஜேஷ் உடலுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் அஞ்சலி DIPR
தமிழ்நாடு

நடிகர் ராஜேஷ் உடலுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் நேரில் அஞ்சலி!

மறைந்த நடிகர் ராஜேஷ் உடலுக்கு முதல்வர் ஸ்டாலின் அஞ்சலி செலுத்தியது பற்றி...

DIN

மறைந்த நடிகர் ராஜேஷின் உடலுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

'அவள் ஒரு தொடர்கதை' படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமாகி ’கன்னிப் பருவத்திலே’ படம் மூலம் கதாநாயகனாகத் தொடங்கி தமிழ் சினிமாவில் 45 ஆண்டுகளுக்கும் மேலாக நடித்து வந்தவர் ராஜேஷ். இவர் நடிப்பில் 150-க்கும் மேற்பட்ட திரைப்படங்களும் பல சின்னத்திரை தொடர்களும் வெளியாகியிருக்கின்றன. சில புத்தகங்களையும் எழுதியுள்ளார்.

நடிகர் ராஜேஷ் உடல்நலக்குறைவால் இன்று(வியாழக்கிழமை) உயிரிழந்த நிலையில் திரை பிரபலங்கள் பலரும் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

முதல்வர் மு.க. ஸ்டாலின், ராஜேஷ் மறைவுக்கு இரங்கல் தெரிவித்ததுடன் சென்னையில் வீட்டில் வைக்கப்பட்டுள்ள ராஜேஷின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். அவருடன் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் கே.என்.நேரு உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தினர்.

இதையும் படிக்க | நடிகர் ராஜேஷ் காலமானார்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆசிய கோப்பை ஹாக்கி: இறுதிச்சுற்றில் இந்தியா! சீனா படுதோல்வி!

திருவள்ளுவர் சிலைக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

பின்லேடனுக்காக அனுப்பப்பட்ட அதே குழுதான் வடகொரியாவுக்கும்? 2019-ல் அமெரிக்காவின் செயல்!

பாஜக கூட்டணியிலிருந்து டிடிவி தினகரன் வெளியேற யார் காரணம்? - நயினார் நாகேந்திரன் சொல்வதென்ன?

இந்துஜா குழுமம் ரூ.7,500 கோடி முதலீடு: முதல்வா் முன்னிலையில் ஒப்பந்தம்

SCROLL FOR NEXT