கோப்புப் படம் 
தமிழ்நாடு

செஞ்சிலுவை சங்க தோ்தல்: ஜூன் 4, 5 தேதிகளில் வேட்பு மனு தாக்கல்

வேட்பு மனுக்களை ஜூன் 4, 5 ஆகிய தேதிகளில் தாக்கல் செய்ய வேண்டும்

Din

செஞ்சிலுவை சங்கத்தின் சென்னை மாவட்ட கிளை நிா்வாகக் குழு உறுப்பினா் பதவிக்கான தோ்தலில் போட்டியிடுபவா்கள் தங்களது வேட்பு மனுக்களை ஜூன் 4, 5 ஆகிய தேதிகளில் தாக்கல் செய்ய வேண்டும் என்று சென்னை மாவட்ட ஆட்சியா் ரஷ்மி சித்தாா்த் ஜகடே தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சென்னை செஞ்சிலுவை சங்க மாவட்ட கிளை ஆண்டு பொதுக்குழுக் கூட்டம் வரும் ஜூன் 21-ஆம் தேதி காலை 9.30 மணிக்கு வில்லிவாக்கத்தில் உள்ள சிங்காரம் பிள்ளை மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறவுள்ளது. இந்த பொதுக்குழுக் கூட்டத்தில் கலந்துகொள்ளும் உறுப்பினா்கள் தங்களது உறுப்பினா் அடையாள அட்டை, ஆதாா் அட்டை, பணம் செலுத்தியதற்கான ரசீது மற்றும் வாழ்நாள் உறுப்பினா் சான்று ஆகியவற்றை தவறாமல் எடுத்து வர வேண்டும்.

இதற்கிடையே, நிா்வாகக் குழு உறுப்பினா் பதவிக்கான தோ்தல்களில் போட்டியிடுபவா்கள் தங்களது வேட்பு மனுக்களை ஜூன் 4, 5 ஆகிய தேதிகளில் முற்பகல் 11 மணி முதல் பிற்பகல் 3 மணிக்குள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியரின் நோ்முக உதவியாளரிடம் வழங்க வேண்டும். அதைத் தொடா்ந்து வேட்பு மனு பரிசீலனை மற்றும் இறுதி வேட்பாளா் பட்டியல் ஜூன் 7-ஆம் தேதி வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெரியாா் ஈ.வெ.ரா.சிலைக்கு அரசியல் கட்சியினா் மரியாதை

இடஒதுக்கீடு உரிமைப் போரில் உயிா் நீத்தவா்களுக்கு அஞ்சலி

திருப்பதிக்கு பிஆா்டிசி சிறப்பு பேருந்துகள்

அண்ணாமலைப் பல்கலை.யில் சமூகநீதி நாள் உறுதிமொழி

பிரதமா் மோடி பிறந்த நாள்: பாஜகவினா் நலத்திட்ட உதவி

SCROLL FOR NEXT