தமிழ்நாடு

மகப்பேறு விடுப்பு! அரசு பெண் ஊழியர்களுக்கு பதவி உயர்வு நிச்சயம்! அரசாணை சொல்வது என்ன?

அரசு பெண் ஊழியர்களின் மகப்பேறு விடுப்புக் காலம், தகுதிகாண் பருவத்தில் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுவதாக அரசாணை வெளியீடு

DIN

தமிழக அரசு பெண் ஊழியர்களின் ஓராண்டு மகப்பேறு விடுப்புக் காலம், தகுதிகாண் பருவத்தில் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும் என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

இந்த அறிவிப்பின் மூலம் மகப்பேறு விடுப்புக் காலத்தால், அரசு பெண் பணியாளர்களின் பதவி உயர்வோ பணி மூப்போ பாதிக்கப்படாது.

தமிழக சட்டப்பேரவையில் ஏப்ரல் 28 ஆம் தேதியில் நடைபெற்ற 2025 - 2026 மானியக் கோரிக்கையின்போது முதல்வர் மு.க.ஸ்டாலின், திருமணமான அரசு பெண் பணியாளர்களுக்கு 9 மாதங்களாக இருந்த மகப்பேறு விடுப்புக் காலம், 2021, ஜூலை மாதம் முதல் தேதியில் இருந்து ஓராண்டாக உயர்த்தப்பட்டது.

தற்போதைய விதிகளின்படி, மகப்பேறு விடுப்புக் காலம், தகுதிகாண் பருவத்துக்கு கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுவதில்லை.

இதனால், தகுதிகாண் பருவத்தை உரிய காலத்தில் முடிக்க இயலாமல், அவர்களுடைய பதவி உயர்வு பாதிக்கப்படுவதுடன், பணி மூப்பினையும் பல்லாயிரக்கணக்கான இளம்மகளிர் அரசுப் பணியாளர்கள் இழக்கும் நிலை ஏற்படுகிறது.

இனிவரும் காலங்களில், அரசுப் பெண் பணியாளர்களின் மகப்பேறு விடுப்புக் காலத்தினை அவர்களது தகுதிகாண் பருவத்துக்கு கணக்கில் எடுத்துக் கொள்ளலாம் என்று அறிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இன்றுமுதல் 50% வரி! டிரம்ப்பின் அழைப்பை 4 முறை மறுத்த பிரதமர் மோடி?

கோவாவில் அக்டோபா் - நவம்பரில் ஃபிடே உலகக் கோப்பை செஸ் போட்டி

ஆவுடையாா்கோவிலில் தலையில்லா புத்தா் சிலை கண்டெடுப்பு

அரசுப் பணி: விண்ணப்பங்களை வரவேற்கும் தமிழக அரசு

ஆம்பூா் கலவர வழக்கு தீா்ப்பு ஒத்திவைப்பு: பலத்த போலீஸாா் பாதுகாப்பு

SCROLL FOR NEXT