படம்: முகநூல் / அன்புமணி  
தமிழ்நாடு

என் அம்மா மீது சிறு துரும்பும் பட விடமாட்டேன்: அன்புமணி

தாயைத் தாக்கியதாக ராமதாஸ் எழுப்பிய குற்றச்சாட்டுக்கு அன்புமணி விளக்கம்...

DIN

என் அம்மா மீது சிறு துரும்பும் பட விடமாட்டேன் என்று பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

பாமக கட்சிக்குள் நிறுவனர் ராமதாஸுக்கும் அவரது மகனும் கட்சியின் தலைவருமான அன்புமணிக்கும் இடையேயான மோதல் தீவிரமடைந்துள்ளது.

வியாழக்கிழமை செய்தியாளர்களை சந்தித்த ராமதாஸ், வீட்டில் கட்சி விவகாரம் குறித்து பேசிக் கொண்டிருந்தபோது, தாயின் மீது பாட்டிலை வீசி அன்புமணி தாக்க முயற்சித்ததாக குற்றச்சாட்டை முன்வைத்தார்.

இந்த நிலையில், சென்னை சோழிங்கநல்லூரில் கட்சி நிர்வாகிகளுடனான சந்திப்பின்போது அன்புமணி பேசுகையில், ”என் அம்மா மீது சிறு துரும்பும் பட விடமாட்டேன், இந்த உலகிலேயே எனக்கு மிகவும் பிடித்தது என் அம்மாதான்” என்று ராமதாஸின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்துள்ளார்.

மேலும், கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு சுதந்திரமாக செயல்பட முடியவில்லை என்றும், இன்றிலிருந்து சுதந்திரமாக செயல்பட முடியும் என நம்புவதாகவும் தெரிவித்திருந்தார்.

அதேபோல், ராமதாஸால் நீக்கப்பட்ட திலகபாமாவை மீண்டும் கட்சியின் பொருளாளராக அன்புமணி நியமித்தார். மேலும், கட்சியின் நிர்வாகிகளை மாற்ற தலைவரான தனக்கே அதிகாரம் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதுகை, பொன்னமராவதி பகுதிகளில் நாளை மின்தடை

குட்டையில் தவறி விழுந்து உயிரிழப்பு

கோயில் பூட்டை உடைத்து வெள்ளிப் பொருள்கள் திருட்டு

காரில் கஞ்சா கடத்தல்: இளைஞா் கைது இரு பெண்கள் மீது வழக்குப் பதிவு

புறவழிச்சாலையில் திரியும் கால்நடைகளால் போக்குவரத்து பாதிப்பு

SCROLL FOR NEXT