பாமக தலைவர் அன்புமணி.  கோப்புப்படம்
தமிழ்நாடு

பாமக நிர்வாகிகளுக்கு 3 வாரங்கள் கெடு: அன்புமணி

பாமக உறுப்பினர் புதுப்பிப்புப் பணிகளை முடிக்க பாமக நிர்வாகிகளுக்கு 3 வாரங்கள் கெடு விதித்துள்ளார் தலைவர் அன்புமணி.

DIN

சென்னை: பாமக அடுத்தகட்டத்துக்குச் செல்ல நாம் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியிருக்கிறார்.

இன்னும் 10 மாதங்களில் தேர்தல் வருகிறது. உறுப்பினர் அடையாள அட்டைகளை புதுப்பிக்கும் பணிகளை 3 வாரங்களில் முடிக்க வேண்டும். பாமகவில் உண்மையான உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என்றும் நிர்வாகிகளுக்கு அன்புமணி ஆலோசனை வழங்கியுள்ளார்.

சென்னையில் 6 மாவட்ட செயலர்களுடன் ஆலோசனைக்குப் பின் சோழிங்கநல்லூரில் பாமக மாவட்டச் செயலர்கள் மத்தியில் பேசி வரும் அன்புமணி, உங்களால்தான் மாநாடு வெற்றி பெற்றது, என்னால் அல்ல என்றார்.

மேலும், நானே தலைவர், அன்புமணி செயல்தலைவர் என்று ராமதாஸ் கூறியிருந்த நிலையில், அதற்கு பதிலளிக்கும் விதமாகவும் பேசி வருகிறார் அன்புமணி.

உங்களுக்குக் கொடுத்த பணிகளை 3 வாரங்களுக்குள் செய்து முடிக்க வேண்டும். முடியுமா? பாமக அடுத்தகட்டத்துக்குச் செல்ல நாம் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். நமது சந்திப்பின் நோக்கம் 3 வாரங்களில் உங்களைது பணிகளை செய்து முடிக்க வேண்டும் என்றும் மிகப்பெரும் கலக்கத்தில் உள்ள பாமகவினரை உற்சாகப்படுத்தும் வகையிலும், நகைச்சுவையாகப் பேசி சிரிக்க வைத்தும் உரையாற்றினார் அன்புமணி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இறுதிப் போட்டியில் அல்கராஸுடன் மோதல்: சாதனை படைப்பாரா சின்னர்?

என்சிசி பயிற்சி பெற்றவர்களுக்கு ராணுவத்தில் அதிகாரிப் பணி: உடனே விண்ணப்பிக்கவும்!

ஏஐ வருகை! 2030-க்குள் 90% வேலை காலி - ஆய்வாளர்கள் எச்சரிக்கை!

ஆஸி. டெஸ்ட் தொடருக்கான இந்தியா ஏ அணியின் கேப்டனாக ஷ்ரேயாஸ் ஐயர் நியமனம்!

ஆசிய கோப்பைக்காக புதிய சிகையலங்காரம்..! வைரலாகும் ஹார்திக் புகைப்படங்கள்!

SCROLL FOR NEXT