செங்கோட்டையன் - கோப்புப்படம் 
தமிழ்நாடு

அதிமுகவிலும் குடும்ப அரசியல்: செங்கோட்டையன் அதிர்ச்சித் தகவல்!

அதிமுகவிலும் குடும்ப அரசியல் உள்ளதாக செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

இணையதளச் செய்திப் பிரிவு

கோவை: திமுகவில் மட்டும் குடும்ப அரசியல் இருப்பதாகக் கூறுகிறார்கள். ஆனால், அதிமுகவிலும் குடும்ப அரசியல் இருக்கிறது என்று கட்சியிலிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் குற்றம் சாட்டியிருக்கிறார்.

இன்று காலை கோவை வந்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் பேசுகையில், திமுகவில் மட்டும் குடும்ப அரசியல் இருப்பதாகக் கூறுகிறார்கள். ஆனால், அதிமுகவிலும் குடும்ப அரசியல் இருக்கிறது. அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் பெயரைக் குறிப்பிடாமல், அதிமுகவிலும் மகன், மைத்துனர், மாப்பிள்ளையின் தலையீடுகள் இருக்கிறது என்பது நாடறிந்த உண்மை என்று கூறினார்.

மேலும், தன்னால் முடியாததை, தன்னால் முடியும் என்று சொல்லி தன்னையும் ஏமாற்றிக் கொண்டு, மற்றவர்களையும் ஏமாற்றக் கூடாது என்று செங்கோட்டையன் கூறியுள்ளார்.

அரசியலைப் பொறுத்தவரை பல்வேறு கருத்து்கள் பரிமாறினால் கூட இந்த இயக்கத்துக்காக புரட்சி தலைவர் காலத்திலிருந்து புரட்சி தலைவி காலம் தொட்டு இந்த காலம் வரை இயக்கம் நாளை வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்தோடு என் பணிகளை மேற்கொண்டு வருகிறேன் என்றார்.

முன்னதாக, பசும்பொன்னில், முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், அமமுக தலைவர் டிடிவி தினகரனுடன் இணைந்து செங்கோட்டையன் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர்களுடன் பேசக் கூடாது என்ற கட்சியின் விதிகளை மீறியதாகக் கூறி, அவரை அதிமுகவிலிருந்து நீக்கி பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார்.

இதனைத் தொடர்ந்து, செங்கோட்டையன், கோபிச்செட்டிப்பாளையத்தில், சனிக்கிழமை செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு விளக்கங்களை அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கடற்கரையில் ஆண் சடலம்

100 நாள் வேலை திட்டத்தை முறையாக செயல்படுத்த கோரி ஆட்சியரிடம் மனு

விடுபட்ட மகளிருக்கு டிசம்பா் முதல் உரிமைத் தொகை: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

கடலில் உயிரிழந்த 4 பேரின் குடும்பத்துக்கு நிவாரண உதவி

அரசு மருத்துவமனையில் 5 மணி நேரம் மின் தடை: நோயாளிகள் கடும் அவதி

SCROLL FOR NEXT