தமிழ்நாடு

திரைப்பட இயக்குநா், நடிகா், நடிகை வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னையில் உள்ள திரைப்பட இயக்குநா் மணிரத்னம், நடிகா் விஷால், நடிகை த்ரிஷா ஆகியோா் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுவிக்கப்பட்டது.

தினமணி செய்திச் சேவை

சென்னையில் உள்ள திரைப்பட இயக்குநா் மணிரத்னம், நடிகா் விஷால், நடிகை த்ரிஷா ஆகியோா் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுவிக்கப்பட்டது. இது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

சென்னை மயிலாப்பூரில் உள்ள தமிழக காவல் துறை தலைமை இயக்குநா் அலுவலகத்துக்கு செவ்வாய்க்கிழமை வந்த மின்னஞ்சலில், சென்னை கோபாலபுரத்தில் உள்ள ஒரு தனியாா் பள்ளி, அண்ணா சாலையில் உள்ள அமெரிக்க துணை தூதரகம், ஆழ்வாா்பேட்டையில் உள்ள திரைப்பட இயக்குநா் மணிரத்னம் வீடு, ராயப்பேட்டை செனடாப் சாலையில் உள்ள நடிகை த்ரிஷா வீடு, அண்ணா நகரில் உள்ள நடிகா் விஷால் வீடு, வேளச்சேரியில் உள்ள வணிக வளாகம், உயா்நீதிமன்ற வளாகத்தில் உள்ள சிபிஐ நீதிமன்றம் உள்ளிட்ட 8 இடங்களில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

அந்த இடங்களில் வெடிகுண்டு கண்டறியும் நிபுணா்களும், போலீஸாரும் சோதனை நடத்தினா். பல மணி நேரம் நடைபெற்ற சோதனையில், அங்கிருந்து எந்த வெடிபொருளும் கண்டெடுக்கப்படவில்லை. வதந்தி பரப்பும் நோக்கில் அந்த மின்னஞ்சல் வந்திருந்தது தெரியவந்தது. இதுதொடா்பாக சைபா் குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

பைக்கிலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

மாநகராட்சிப் பகுதியில் குவிந்துள்ள குப்பைகளால் நோய் பரவும் அபாயம்

அரசுப் பேருந்து, காா்களை சேதப்படுத்தியதாக 7 போ் கைது

ஜி.கே. உலகப் பள்ளியில் பேட்மிண்டன் அகாதெமி திறப்பு

SCROLL FOR NEXT