அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று(நவ. 5) காலை தொடங்கி நடைபெற்று வருகிறது.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெறும் கூட்டத்தில் கட்சி நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள் கலந்துகொண்டுள்ளனர்.
அதிமுகவில் இருந்து செங்கோட்டையனை நீக்கிய பிறகு நடக்கும் முதல் கூட்டம் இதுவாகும்.
அதிமுகவில் நிலவும் உள்கட்சி பிரச்னைகள், தேர்தல் பணிகள், வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் உள்ளிட்டவை குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என்று கூறப்படுகிறது.
முன்னதாக கட்சி தலைமை அலுவலகத்துக்கு வந்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அலுவலக வாசலில் உள்ள எம்ஜிஆர், ஜெயலலிதா திருவுருவச் சிலைக்கு மலர்தூவி மரியாதை செய்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.