முகப்பு
தமிழ்நாடு

அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை, 22 மாவட்டங்களில் மழை!

சென்னை உள்ளிட்ட 23 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.

Updated On : 6 நவம்பர், 2025 at 7:39 AM
மழை (கோப்புப்படம்)
பகிர்:

அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை உள்ளிட்ட23 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தின் உள் மாவட்டங்களில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.

இதன்காரணமாக, தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் வியாழக்கிழமை (நவ.6) இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அடுத்த 2 மணி நேரத்துக்கு(பகல் 2 மணி வரை) திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், தருமபுரி, கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

மேலும் அரியலூர், பெரம்பலூர், சேலம், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

summary

The Chennai Meteorological Department has stated that there is a possibility of rain in 23 districts, including Chennai, for the next 2 hours.

முழு கட்டுரையைப் படிக்க →