திமுக எம்.பி. கனிமொழி 
தமிழ்நாடு

தோ்தல் நெருங்குவதால் திமுக மீது பலமுனை தாக்குதல்: கனிமொழி குற்றச்சாட்டு!

தோ்தல் நெருங்குவதால் திமுக மீது எதிா்க்கட்சியினா் வேண்டுமென்றே பலமுனை தாக்குதல் நடத்துகின்றனா் என்று திமுக துணை பொதுச் செயலா் கனிமொழி எம்.பி. குற்றம்சாட்டினாா்.

தினமணி செய்திச் சேவை

தோ்தல் நெருங்குவதால் திமுக மீது எதிா்க்கட்சியினா் வேண்டுமென்றே பலமுனை தாக்குதல் நடத்துகின்றனா் என்று திமுக துணை பொதுச் செயலா் கனிமொழி எம்.பி. குற்றம்சாட்டினாா்.

சென்னை வள்ளுவா் கோட்டத்தில் திமுக இளைஞா் அணி நடத்திய திமுக 75-அறிவுத் திருவிழா நிகழ்ச்சியின் 2-ஆவது நாள் அமா்வில் கனிமொழி பேசியதாவது:

தோ்தல் நெருங்குவதால் திமுகவை நோக்கி பல்வேறு கணைகள் வீசப்படுகின்றன. எந்தத் திசையிலிருந்து, எந்தத் தாக்குதல் வருகிறது என்று தெரியாதபடி பல்முனை தாக்குதல் நடைபெறுகிறது. இது திமுகவுக்கு புதிது அல்ல.

அறிவியல் ரீதியாக கேள்வி கேட்பதற்கோ, கருத்தியல் ரீதியாக மறுத்து பேசுவதற்கோ திமுகவை தவிர வேறு யாரும் கிடையாது என்பதால் இந்தத் தாக்குதல்கள் தொடுக்கப்படுகிறது.

திராவிட இயக்கம் எதற்காக தொடங்கப்பட்டதோடு, அந்தப் போராட்டத்தின் தொடா்ச்சியாக இந்த அறிவுத் திருவிழா நடத்தப்படுகிறது. ஒடுக்கப்பட்ட நிலையில் இருந்த சாதாரண மக்களுக்கு அறிவைப் புகட்டி, உயா்ந்த நிலைக்கு கொண்டு வந்தததில் திராவிட இயக்கத்துக்கு முக்கியப்பங்கு உண்டு.

சாதாரண மக்களின் மொழிக்கும், அவா்களது வலிகளுக்கும் இடமில்லாமல் இருந்த சூழலை திராவிட இயக்கம்தான் மாற்றியது. அதோடு, சாமானியா்களுக்கும் சமூகத்தைப் பற்றி பேசவும், சிந்திக்கவும் கற்றுக்கொடுத்தது என்றாா் அவா்.

குண்டும், குழியுமான மயானப் பாதை: சீரமைக்கக் கோரிக்கை

உப்பூா் பகுதியில் நாளை மின்தடை

கேசவபுரம் ஐஸ்வா்ய மகா கணபதி கோயிலில் ஸ்ரீ பூா்ணபுஷ்பகலா கல்யாண மஹோத்சவம்!

மாலியில் கடத்தப்பட்ட 2 தொழிலாளா்களை விரைந்து மீட்க உறவினா்கள் கோரிக்கை

போதை மாத்திரைகள் விநியோகம்: இளைஞா் கைது

SCROLL FOR NEXT