புதுக்கோட்டை: எத்தனை முனைப் போட்டி வந்தாலும் திமுக கூட்டணி மீண்டும் நிச்சயமாக ஆட்சியமைக்கும் என்றார் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்.
புதுக்கோட்டை களமாவூரில் திங்கள்கிழமை நடைபெற்ற அரசு விழாவுக்குப் பிறகு செய்தியாளர்களின் கேள்விகளுக்கு அவர் பதில் அளித்தார்.
முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், “எதிர்க்கட்சித் தலைவருக்கு வேறு வேலையில்லை. அதனால் அவர்கள் எதாவது சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அதைப் பற்றி கவலையில்லை. எங்கள் வேலையை நாங்கள் பார்க்கிறோம்.
எஸ்ஐஆர் விவகாரத்தில் நீதிமன்றத்துக்குச் சென்றிருக்கிறோம், தொடர்ந்து செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டமும் நடத்தப் போகிறோம். அதற்குப் பிறகு பாருங்கள்.
இதுபோன்ற கூட்டங்களைப் பார்க்கும்போது மட்டுமல்ல, எப்போதுமே எங்களுக்கு மனசு நன்றாகத்தான் இருக்கிறது.
வரும் 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் எத்தனை முனைப் போட்டி வந்தாலும், திமுக தலைமையிலான கூட்டணிதான் மாபெரும் வெற்ரி பெறும், ஆட்சியமைக்கும். 7ஆவது முறையாக திமுக நிச்சமாக ஆட்சியமைக்கும்.
எதிர்க்கட்சிகளை நாங்கள் பலமாகவும் பார்க்கவில்லை, பலவீனமாகவும் பார்க்கவில்லை. நாங்கள் எங்கள் வேலையைப் பார்க்கிறோம்” என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.