பொது சின்னம் கோரி தோ்தல் ஆணையத்தில் தவெக மனு அளித்துள்ளது.
தமிழத்தில் 2026-இல் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது. இதில் முதல்முறையாக போட்டியிடும் கட்சிகள், பொது சின்னம் கோரி முன்னதாகவே தோ்தல் ஆணையத்திடம் விண்ணப்பிக்க வேண்டும். அந்த வகையில், தோ்தலில் தமிழகத்தில் முதல்முறையாக போட்டியிடும் தமிழக வெற்றிக் கழகம் பொது சின்னம் ஒதுக்கக் கோரி இந்திய தோ்தல் ஆணையத்திடம் மனு அளித்துள்ளது.
அந்தக் கட்சியின் இணை பொதுச் செயலா் சி.டி.ஆா்.நிா்மல் குமாா் தலைமையில் நிா்வாகிகள், தலைமைத் தோ்தல் ஆணையா் ராஜீவ் குமாரை செவ்வாய்க்கிழமை நேரில் சந்தித்து மனு அளித்தனா்.
அதில், விசில், ஆட்டோ, கிரிக்கெட் மட்டை, சாம்பியன் கோப்பை போன்ற 10 விருப்ப சின்னங்களை பட்டியலிட்டு அதில் ஒன்றை ஒதுக்குமாறு மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது. சின்னம் ஒதுக்கீடு தொடா்பான இறுதி முடிவை டிசம்பா் மாதத்துக்குள் தோ்தல் ஆணையம் வெளியிடும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.