எஸ்ஐஆர்-ஐ எதிர்த்து போராட்டம். 
தமிழ்நாடு

எஸ்ஐஆர்-ஐ தடுப்பதே பெரும் கடமை: முதல்வர் ஸ்டாலின்

எஸ்ஐஆர்-ஐ தடுப்பதே நம்முன் இப்போதுள்ள ஆகப்பெரும் கடமை என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இணையதளச் செய்திப் பிரிவு

எஸ்ஐஆர்-ஐ தடுப்பதே நம்முன் இப்போதுள்ள ஆகப்பெரும் கடமை என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இந்தியத் தேர்தல் ஆணையத்தைக் கண்டித்தும், வாக்காளர் பட்டியலில் நடக்கும் முறைகேடுகளை எதிர்த்தும், திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் இன்று(நவ. 11) கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.

இது குறித்து முதல்வர் தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில், “எஸ்ஐஆர்-ஐ தடுப்பதே நம்முன் இப்போதுள்ள ஆகப்பெரும் கடமை.

ஒருபுறம், மக்களாட்சியின் அடிப்படையான வாக்குரிமையையே பறிக்கும் எஸ்ஐஆர் எனும் ஆபத்துக்கு எதிராகச் சட்டப் போராட்டம் - களப் போராட்டம் - மறுபுறம், தொடங்கப்பட்டுவிட்ட எஸ்ஐஆர் பணிகளில் குளறுபடிகளைத் தடுத்திட வார் ரூப் உதவி எண்.

களப் போராட்டத்தில், இன்று தமிழ்நாடெங்கும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் பதாகைகளை ஏந்தியும் - கண்டன முழக்கங்களை எழுப்பியும் எஸ்ஐஆர் எனும் பேராபத்துக்கு எதிராகக் கூடியுள்ள மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியினர்!

தொடர்ந்து செயலாற்றுவோம்! நம் மக்களின் வாக்குரிமையைப் பாதுகாப்போம்!” என்று குறிப்பிட்டுள்ளார்.

Chief Minister Stalin has said that the biggest duty before us now is to stop SIR.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஏனெனில், பிசாசு எப்போதும் எனக்குப் பின்னால் இருந்தது... மோனாமி கோஷ்!

'வசந்த்'த காலம்... ருக்மணி வசந்த்!

முனிஷ்காந்த், விஜயலட்சுமியின் மிடில் கிளாஸ் டிரைலர்!

SIR: வாயில் வடை சுடுவது சுலபம்! குறுகிய காலத்தில் எப்படி சாத்தியம்?: பிடிஆர் சாடல்!

மகிழ்ச்சியின் இடம்... அவ்னீத் கௌர்!

SCROLL FOR NEXT