மழை (கோப்புப்படம்) DIN
தமிழ்நாடு

அடுத்த 2 மணி நேரத்துக்கு 7 மாவட்டங்களில் மழை!

அடுத்த 2 மணி நேரத்துக்கு 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.

இணையதளச் செய்திப் பிரிவு

அடுத்த 2 மணி நேரத்துக்கு 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வட உள் தமிழகம், அதையொட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால், செவ்வாய்க்கிழமை (நவ.11) தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

இதனால், செவ்வாய்க்கிழமை (நவ.11) திருநெல்வேலி மாவட்ட மலைப் பகுதிகள், தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதால், இந்த மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், அடுத்த 2 மணி நேரத்துக்கு (காலை 10 மணி வரை) கடலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்கள் காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Chance of rain in 7 districts for the next 2 hours.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இஸ்ரேல் கப்பல்கள் மீதான ஹவுதிகளின் தாக்குதல்கள் நிறுத்தம்!

கனத்த இதயத்துடன் வந்திருக்கிறேன்; சதிகாரர்கள் தப்ப முடியாது! - பூடானில் மோடி பேச்சு

தெய்வ தரிசனம்... சகல பாவங்களைப் போக்கும் மயிலாடுதுறை மயூரநாதர்!

தில்லி கார் வெடிப்பு! ஃபரிதாபாத் வெடிபொருள் பறிமுதலின் எதிரொலியாக நடத்தப்பட்டதா?

விஜய் சேதுபதியின் டிரெயின் வெளியீட்டுத் தேதி இதுவா?

SCROLL FOR NEXT