2025 ஆம் ஆண்டில் மட்டும் இலங்கை கடல்பகுதியில் மீன்பிடித்த 328 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டதாக, இலங்கையின் மீன்வளத் துறை அறிவித்துள்ளது.
இலங்கை கடல்பகுதியில் சட்டவிரோதமாக மீன்பிடிப்பில் ஈடுபடும் இந்திய மீனவர்களின் கைதுகள் நிகழாண்டில் (2025) அதிகமாகியுள்ளதாக, இலங்கையின் மீன்வளத் துறை துணை அமைச்சர் ரத்னா கமாகே தெரிவித்துள்ளார்.
இதுபற்றி, அவர் கூறியதாவது:
“2025 ஆம் ஆண்டில் மட்டும் 328 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், அவர்களிடம் இருந்து 41 மீன்பிடி படகுகள் கைப்பற்றப்பட்டுள்ளன. இந்த நடவடிக்கைகள் அனைத்தையும் இலங்கையின் மீன்வள அமைச்சகம், கடற்படை மற்றும் காவல் துறையினர் இணைந்து மேற்கொண்டனர்” எனக் கூறியுள்ளார்.
சமீபத்தில், கடந்த நவ.10 ஆம் தேதி இலங்கையின் யாழ்ப்பாணத்தின் அனலதீவின் அருகில் மீன்பிடித்ததாக, 14 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டனர்.
இத்துடன், இலங்கை மற்றும் தமிழ்நாடு இடையில் அமைந்துள்ள பாக் நீரினை கடல்பகுதியில் மீன்வளம் அதிகமாக இருப்பதால், இருநாட்டு மீனவர்களுக்கும் மீன்பிடி பகுதியாக அது அமைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இதையும் படிக்க: ஜார்ஜியா விமான விபத்து! துருக்கியின் ராணுவ சரக்கு விமானங்கள் பறக்கத் தடை!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.