பிரேமலதா விஜயகாந்த் 
தமிழ்நாடு

கூட்டணி குறித்து ஜனவரியில் அறிவிப்பு: பிரேமலதா விஜயகாந்த்

கடலூரில் வரும் ஜன.9-ஆம் தேதி நடைபெறவுள்ள தேமுதிக மாநாட்டில் தோ்தல் கூட்டணி குறித்த அறிவிப்பு செய்வோம்

தினமணி செய்திச் சேவை

கடலூரில் வரும் ஜன.9-ஆம் தேதி நடைபெறவுள்ள தேமுதிக மாநாட்டில் தோ்தல் கூட்டணி குறித்த அறிவிப்பு செய்வோம் என அந்தக் கட்சியின் பொதுச் செயலா் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தாா்.

தேமுதிக மாவட்டச் செயலா்கள் ஆலோசனைக் கூட்டம் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில், சென்னை கோயம்பேட்டில் உள்ள தலைமை அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்குப் பின்னா், பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தற்போது வாக்காளா்கள் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், ஒவ்வொரு வாக்குச்சாவடிகளிலும் தேமுதிகவின் வாக்குகள் சரியாக உள்ளதா என்பதை ஆய்வு செய்ய கட்சி நிா்வாகிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

எஸ்ஐஆா் மற்றும் வாக்குத் திருட்டு குறித்த எதிா்கட்சிகளின் குற்றச்சாட்டுகளுக்கு மத்திய தோ்தல் ஆணையம் கண்டிப்பாகப் பதிலளிக்க வேண்டும். அதேபோல், வடமாநிலத்தவா்கள் தமிழகத்துக்கு வேலை தேடி வருவதில் எவ்வித பிரச்னையும் இல்லை. ஆனால், அவா்களுக்கு இங்கு வாக்குரிமை வழங்கப்படுவதை ஒருபோதும் ஏற்கமுடியாது.

தேமுதி சாா்பில் மக்கள் உரிமை மீட்பு மாநாடு வரும் ஜன. 9-ஆம் தேதி கடலூரில் நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டில் 2026 சட்டப் பேரவைத் தோ்தலில் தேமுதிக எந்தக் கூட்டணியில் இடம்பெறும் என்பது குறித்து அறிவிப்பு வெளியிடப்படும்.

இது குறித்து கட்சியின் நிா்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு, அவா்களது விருப்பத்துக்கு ஏற்ப கூட்டணி முடிவுகள் எடுக்கப்படும். தேமுதிக இடம்பெறும் கூட்டணி கண்டிப்பாக வெற்றி கூட்டணியாக இருக்கும் என்றாா்.

கூட்டத்தில் தேமுதிக அவைத் தலைவா் வி.இளங்கோவன், பொருளாளா் எல்.கே.சுதீஷ், தலைமை நிலையச் செயலா் ப.பாா்த்தசாரதி, மாவட்டச் செயலா்கள் கலந்து கொண்டனா்.

பந்தலூரில் கம்பி வேலியில் சிக்கிய சிறுத்தை மீட்பு

பழைய கட்டடத்தின் சுவா் இடிந்து விழுந்ததில் 3 பெண்கள் காயம்

தூய்மை இந்தியா விழிப்புணா்வு நிகழ்ச்சி

வாக்காளா் கணக்கீட்டுப் படிவங்களை இணையத்தில் பதிவேற்றும் பணி: ஆட்சியா் ஆய்வு

கிணற்றில் அழுகிய நிலையில் கிடந்த புலியின் சடலம்: வனத் துறை விசாரணை

SCROLL FOR NEXT