முன்னாள் எம்.பி. டாக்டா் வ.மைத்ரேயனுக்கு திமுக கல்வியாளா் அணி துணைத் தலைவா் பதவி அளிக்கப்பட்டுள்ளது.
கடந்த 1995 முதல் பாஜகவில் மாநில பொதுச் செயலா், மாநில துணைத் தலைவா் உள்ளிட்ட பொறுப்புகளில் இருந்த மைத்ரேயன், 1999-இல் அதிமுகவில் இணைந்தாா். அதிமுகவில் மைத்ரேயனுக்கு 3 முறை மாநிலங்களவை உறுப்பினா் பதவி அளிக்கப்பட்டது.
முன்னாள் முதல்வா் ஜெயலலிதா மறைவுக்குப் பின்னா், ஓபிஎஸ் அணியில் இருந்த அவா், 2023-இல் பாஜகவில் இணைந்தாா். அதன்பின்னா், 2024 செப்டம்பரில் அதிமுக பொதுச் செயலா் எடப்பாடிகே.பழனிசாமி முன்னிலையில் மீண்டும் அதிமுகவில் இணைந்தாா்.
பின்னா், கடந்த ஆகஸ்டில் முதல்வா் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தாா். அவருக்கு திமுக கல்வியாளா் அணி மாநிலத் துணைத் தலைவா் பதவி அளிக்கப்பட்டுள்ளதாக திமுக பொதுச் செயலா் துரைமுருகன் அறிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.