செங்கல்பட்டு: மாமல்லபுரம் அருகே திருப்போரூரில் பயிற்சி விமானம் கீழே விழுந்து நொறுங்கியது. நல்வாய்ப்பாக பயிற்சி விமானத்தில் இருந்த 3 பேர் பாராசூட் மூலம் குதித்து உயிர் தப்பியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அருகே திருப்போரூரில் உள்ள தொழிற்சாலைக்கு அருகே பயிற்சி விமானம் விழுந்து நொறுங்கியது. அதில் இருந்த 3 பேர் பத்திரமாக வெளியே குதித்து உயிர் தப்பினர்.
விமானம் வானில் பறந்துகொண்டிருந்தபோது, தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதாகவும், இதனை அறிந்த விமானிகள், அதிலிருந்து பாராசூட் மூலம் வெளியே குதித்த நிலையில், விமானம் சேறு அதிகம் நிறைந்த பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானதாக சம்பவ இடத்திலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
முதலில், அந்த சிறிய விமானம் தாம்பரம் விமானப் படைத் தளத்திலிருந்து சென்றதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் அந்த தகவல் உறுதிப்படுத்தப்படவில்லை.
தனியாருக்குச் சொந்தமான விமானமாக இருக்கலாம் என்றே கூறப்படுகிறது. திருப்போரூர் உப்பளப் பகுதியில் உள்ள சகதியில் விமானம் விழுந்து நொறுங்கியதால் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது.
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர், விமானத்தில் வந்தவர்களிடம் விசாரணை நடத்தி வரகிறார்கள்.
புதுக்கோட்டை அருகே நேற்று சிறிய ரக விமானம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக சாலையில் தரையிறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.