சென்னையில் ‘96’ என்ற புதிய அரசுப் பேருந்து வழித்தடம் தொடக்கப்பட்டுள்ளது.
தாம்பரம் மேற்கு பேருந்து நிலையம் முதல் அடையாறு பேருந்து நிலையம் வரை 96 என்ற புதிய வழத்தடத்தை சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகம் அறிமுகம் செய்தது.
இதற்கான 7 பேருந்துகள் இயக்கத்தை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் இன்று பள்ளிக்கரணையில் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
கேம்ப் ரோடு, பள்ளிக்கரணை, காமாட்சி மருத்துவமனை, துரைப்பாக்கம், கந்தன்சாவடி வழியாக அடையாறு சென்றடையும்.
இந்நிகழ்வில், சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர், மாநகரப் போக்குவரத்துக் கழக பொது மேலாளர் (இயக்கம்), பொது மேலாளர் (தெற்கு) மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.