முகப்பு
தமிழ்நாடு

இரவில் சென்னை, 12 மாவட்டங்களில் மழை!

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணிநேரத்துக்கு சென்னை உள்பட 13 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.

Updated On : 16 நவம்பர் 2025, 8:37 pm IST
கோப்புப் படம்
பகிர்:

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணிநேரத்துக்கு சென்னை உள்பட 13 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணிநேரத்துக்கு (இரவு 10 மணி வரை) சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களின் ஒருசில பகுதிகளிலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

தென்மேற்கு வங்கக்கடலில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளதால், தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட 7 மாவட்டங்களுக்கு நாளை (நவ.17) மிக கனமழைக்கான ‘ஆரஞ்சு’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க | 1 முதல் பிளஸ் 2 வரை அரையாண்டுத் தேர்வு: டிச. 10ல் தொடக்கம்

summary

rain chance for 13 districts of tamilnadu

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.