கோப்புப் படம் 
தமிழ்நாடு

அடுத்த 3 மணிநேரத்துக்கு சென்னை, 13 மாவட்டங்களில் மழை!

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணிநேரத்துக்கு சென்னை உள்பட 14 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.

இணையதளச் செய்திப் பிரிவு

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணிநேரத்துக்கு சென்னை உள்பட 14 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணிநேரத்துக்கு (இரவு 7 மணி வரை) சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களிலும் புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென்மேற்கு வங்கக்கடலில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளதால், தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட 7 மாவட்டங்களுக்கு நாளை (நவ.17) மிக கனமழைக்கான ‘ஆரஞ்சு’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க | சென்னையில் ‘96’ என்ற புதிய அரசுப் பேருந்து வழித்தடம் தொடக்கம்

rain chance for 14 districts of tamilnadu

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மும்பையில் சி.என்.ஜி. குழாய் சேதத்தால் கேஸ் விநியோகம் பாதிப்பு!

இரவில் சென்னை, 12 மாவட்டங்களில் மழை!

தமிழகத்தில் 2026 இல் கூட்டணி ஆட்சி அமையும்: பிரேமலதா விஜயகாந்த்

காதல் சடுகுடு... அனுபமா பரமேஸ்வரன்!

மாஸ்கோவில் ரஷிய வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் நாளை சந்திப்பு!

SCROLL FOR NEXT