கோப்புப்படம் 
தமிழ்நாடு

அடுத்த 2 மணி நேரத்துக்கு எங்கெல்லாம் மழை!

அடுத்த 2 மணி நேரத்துக்கு 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.

இணையதளச் செய்திப் பிரிவு

அடுத்த 2 மணி நேரத்துக்கு 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு வங்கக்கடலில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளதால், தமிழகத்தில் கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் ஞாயிற்றுக்கிழமை(நவ.16) மிக பலத்த மழைக்கான ‘ஆரஞ்சு’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தென் இலங்கை மற்றும் அதையொட்டிய தென்மேற்கு வங்கக் கடலில் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, இலங்கை கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடலில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவானது.

இது ஞாயிற்றுக்கிழமை(நவ.16) காலை மேற்கு-வடமேற்கு திசையில் மெதுவாக நகா்ந்து செல்லக்கூடும்.

இதன்காரணமாக, ஞாயிற்றுக்கிழமை (நவ. 16) கடலோர தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், உள்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், அடுத்த 2 மணி நேரத்துக்கு(காலை 10 மணி வரை) விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்கள் மற்றும் தென்காசி, திருநெல்வேலி மாவட்டங்களின் மலைப் பகுதிகளிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The Chennai Meteorological Department has reported that there is a possibility of rain in 7 districts for the next 2 hours.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிகார் முதல்வர் பதவியேற்பு விழா! தேஜ கூட்டணி முதல்வர்களுடன் விமரிசையாக நடத்த திட்டம்!

சாதி ரீதியான படங்கள் அந்த காலத்தில் இருந்தே வந்து கொண்டிருக்கின்றன: நடிகர் சரவணன்

தேசிய பத்திரிகை நாள்: முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து!

மயிலே, மயிலே... தர்ஷா குப்தா!

“தளபதி சொன்னதால் வந்திருக்கிறோம்” SIR-ஐ எதிர்த்து தவெகவினர் கண்டன போராட்டம்! | TVK

SCROLL FOR NEXT