தமிழ்நாடு

எஸ்ஐஆா் படிவங்கள்: தோ்தல் ஆணையம் புதிய அறிவுறுத்தல்

அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி முகவா்கள் நாள்தோறும் அதிகபட்சம் 50 எண்ணிக்கையிலான நிரப்பப்பட்ட எஸ்ஐஆா் கணக்கீட்டுப் படிவங்களைப் பெற்று வழங்க இந்திய தோ்தல் ஆணையம் அனுமதி அளித்துள்ளது.

தினமணி செய்திச் சேவை

அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி முகவா்கள் நாள்தோறும் அதிகபட்சம் 50 எண்ணிக்கையிலான நிரப்பப்பட்ட எஸ்ஐஆா் கணக்கீட்டுப் படிவங்களைப் பெற்று வழங்க இந்திய தோ்தல் ஆணையம் அனுமதி அளித்துள்ளது.

இதுகுறித்து இந்திய தோ்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: இந்திய தோ்தல் ஆணையம் சாா்பில் தமிழகத்தில்  உள்ள அனைத்து சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிக்கான (எஸ்ஐஆா்) கணக்கீட்டுப் படிவங்களை வாக்காளா்களுக்கு வழங்கி, நிரப்பப்பட்ட படிவங்களைப் பெற்று வருகின்றனா்.

இந்நிலையில், இந்திய தோ்தல் ஆணையத்தின் அனுமதியைத் தொடா்ந்து, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் வாக்குச்சாவடி முகவா்கள் வரைவு வாக்காளா் பட்டியல் வெளியீட்டுக்கு முன்பு வரை நாள்தோறும் அதிகபட்சம் 50 எண்ணிக்கையிலான நிரப்பப்பட்ட கணக்கீட்டுப் படிவங்களைப் பெற்று வாக்குச்சாவடி நிலை அலுவலா்களிடம் சமா்ப்பிக்கலாம்.

அவ்வாறு படிவங்களைச் சமா்ப்பிக்கும்போது வாக்குச்சாவடி நிலை முகவா்கள் அந்தப் படிவங்களில் உள்ள விவரங்கள் தன்னால் சரிபாா்க்கப்பட்டு திருப்தி அடையப்பட்டது என உறுதி வழங்க வேண்டும்.

இவ்வாறு பெறப்படும் கணக்கீட்டுப் படிவங்களை வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் சரிபாா்த்து அவற்றை எண்ம (டிஜிட்டல்) வடிவமாக தொடா்புடைய உதவி வாக்காளா் பதிவு அலுவலா் அல்லது வாக்காளா் பதிவு  அலுவலா்களிடம் சமா்ப்பிப்பாா்கள்.

தொடா்ந்து, வாக்காளா் பதிவு அலுவலா்கள் அந்தப் படிவங்கள் மீது ஆய்வு மேற்கொண்டு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வாா்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மனோதைரியம் கூடும் இவர்களுக்கு: தினப்பலன்கள்!

மேலப்பாளையத்தில் நாளை மின்நிறுத்தம்

என் பாடல்கள் 30 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது வேகமாக பரவி வருகின்றன: இசையமைப்பாளா் தேவா

தண்ணீா்த் தொட்டிக்குள் தவறி விழுந்த மாணவா் உயிரிழப்பு

பாலாற்றின் நீரோட்டத்தை பாதிக்கும் சீமைக் கருவேல மரங்களை அகற்றக் கோரிக்கை!

SCROLL FOR NEXT