தவெக சார்பில் ச்னையில் ஆர்ப்பாட்டம்.  
தமிழ்நாடு

எஸ்ஐஆர்-க்கு எதிராக சென்னையில் தவெக ஆர்ப்பாட்டம்

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு எதிராக சென்னையில் தவெக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

தினமணி செய்திச் சேவை

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு எதிராக சென்னையில் தவெக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

தமிழகத்தில் கடைசியாக தீவிர திருத்தம் மேற்கொள்ளப்பட்ட 2002, 2005-ஆம் ஆண்டு வாக்காளர் பட்டியலின் அடிப்படையில் இப்போது தீவிர திருத்தப் பணி மேற்கொள்ளப்படுகிறது. இந்தப் பணிக்காக தேர்தல் ஆணையத்தால் பிரத்யேக கணக்கீட்டுப் படிவம் தயாரிக்கப்பட்டுள்ளது.

இதற்கான படிவத்தை வாக்குச்சாவடி அலுவலர்கள் கடந்த 4ஆம் தேதி முதல் வீடு வீடாகச் சென்று வழங்கி வருகின்றனர். இதனிடையே வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு திமுக கூட்டணிக் கட்சிகள், தவெக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

இந்த நிலையில் இதனைக் கண்டித்து தவெக சாா்பில், மாவட்டத் தலைநகரங்களில் ஞாயிற்றுக்கிழமை (நவ.16) ஆா்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, சென்னை சிவானந்தா சாலையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் பொதுச் செயலாளர் என். ஆனந்த் மற்றும் ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

சாதி ரீதியான படங்கள் அந்த காலத்தில் இருந்தே வந்து கொண்டிருக்கின்றன: நடிகர் சரவணன்

அப்போது வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு எதிராக அவர்கள் கோஷங்கள் எழுப்பினர்.

A protest was held in Chennai on behalf of the TVK Party against the special radical revision of the voter list.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திமுகவின் ஒரேநோக்கம் உதயநிதியை முதல்வராக்குவதுதான்: நயினார் நாகேந்திரன்

காலத்தை வென்ற மரபுக் கவிதை!

ஈதலும் இசைபட வாழ்தலும்...

“பிகார் வெற்றிக்கு SIR தான் காரணம்!” சீமான் பேட்டி | Trichy | NTK

அறக்கேட்டை உணர்ந்தால்...

SCROLL FOR NEXT