முதல்வர் மு.க. ஸ்டாலின் வீடு, நடிகர் அஜித் உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் வீடு உள்ளிட்ட இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
சென்னையில் பல்வேறு இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் வருவதும் தினமும் தொடர்கதையாகியுள்ளது. சோதனையில் அது புரளி என்றே தெரிய வருகிறது.
இந்நிலையில் இன்று சென்னையில் முதல்வர் மு.க. ஸ்டாலின், பாஜக தலைமை செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி, நடிகர்கள் அஜித், அரவிந்த் சாமி, கங்கை அமரன், லிவிங்ஸ்டன், எஸ்பிபி சரண், திண்டுக்கல் லியோனி, இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ், செஸ் வீரர் பிரக்யானந்தா, குஷ்பு சுந்தர் , ஜெயரஞ்சன் ஆகியோரின் வீடுகள்அமலாக்கத்துறையில் உள்ள சி.ஆர்.பி.எப். அலுவலகம் ஆகிய இடங்களில் வெடிகுண்டு வைத்திருப்பதாக டிஜிபி அலுவலகத்திற்கு மெயில் மூலம் நேற்று நள்ளிரவு மிரட்டல் விடுக்கப்பட்டது.
இந்த இடங்களில் நடைபெற்ற சோதனையில் அது புரளி என தெரிய வந்துள்ளது.
இந்நிலையில் போலீசார், வெடிகுண்டு மிரட்டல் குறித்து தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.