துணை சிறை அலுவலர் எஸ். ஜெயக்குமாரின் 26-ஆம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்ச்சி.  
தமிழ்நாடு

சிவகங்கை: சிறைக் கலவரத்தில் எரித்துக்கொல்லப்பட்ட துணை ஜெயிலருக்கு நினைவஞ்சலி!

சென்னை மத்திய சிறையில் ஏற்பட்ட வன்முறையில் எரித்துக் கொலை செய்யப்பட்ட துணை சிறை அலுவலர் எஸ். ஜெயக்குமாரின் 26-ஆம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

தினமணி செய்திச் சேவை

சென்னை மத்திய சிறையில் ஏற்பட்ட வன்முறையில் எரித்துக் கொலை செய்யப்பட்ட துணை சிறை அலுவலர் எஸ். ஜெயக்குமாரின் 26-ஆம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

சென்னை மத்திய சிறையில் கடந்த 1999ஆம் ஆண்டு நவ.17ஆம் தேதி கைதிகளுக்குள் ஏற்பட்ட மோதலை தடுக்க முயன்றபோது துணை சிறை அலுவலர் எஸ். ஜெயக்கு மார் கைதிகளால் தாக்கப்பட்டு உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டார்.

இவருடன் 9 கைதிகளும் கொல்லப்பட்ட னர். இதையடுத்து, சிவகங்கையில் இவருக்கு சொந்த இடத்தில் குடும்பத்தினரால் நினைவிடம் அமைக்கப்பட்டது.

இங்கு, ஆண்டுதோறும் அவரது குடும்பத்தினர், உறவினர்கள், சிறைத்துறையினர் மரியாதை செலுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், இவர் இறந்து 26 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், சிவகங்கையிலுள்ள அவரது நினைவிடத்தில் அவரது குடும்பத்தினர், உறவினர்கள் மரியாதை செலுத்தினர்.

பிகாரில் பாஜகவுக்கு எதிராக போராட்டம் வெடித்ததா? உண்மை என்ன?

மேலும், சிவகங்கை ஓய்வு பெற்ற சிறைத்துறை அலுவலர்களும், அப்பகுதி பொதுமக்களும் மரியாதை செலுத்தினர்.

இதையடுத்து, அவரது குடும்பத்தினர் சார்பில் காரைக்குடியில் கோயில் வாசலில் எளியவர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.

The 26th anniversary memorial event for Deputy jailer S. Jayakumar who was burned to death during violence at Chennai Central Prison was held on Monday.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

SIR-ஐ கண்டித்து Vijay ஆர்ப்பாட்டம் நடத்தியிருக்கக் கூடாது! - Tamilisai Soundararajan

இன்று முதல் புதிய நேரத்தில் இரு தொடர்கள்!

இன்றைய பங்குச்சந்தை ஏற்றத்துடன் நிறைவு! பிகார் தேர்தல் காரணமா?

பிக் பாஸ் 9: இந்த வாரம் வெளியேறும் நபர்கள் யார்?

பிரபஞ்சத்தின் ஒரே அழகி... சான்யா மல்ஹோத்ரா!

SCROLL FOR NEXT