நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகள் இன்று (நவ. 18) வழக்கம்போல செயல்படும் என்று நாகை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
இலங்கை கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்தத் தாழ்வு பகுதி, தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகள் மற்றும் அதை ஒட்டிய இலங்கை கடலோர பகுதிகளில் நிலவுகிறது.
இதன் காரணமாக நாகை மாவட்டத்தில் திங்கள்கிழமை அதிகாலையிலிருந்து நாகை, நாகூர், திருமருகல், கீழ்வேளூர், தேவூர், திருக்குவளை, தலைஞாயிறு, வேதாரன்யம் கோடியக்கரை, கோடியக்காடு உள்ளிட்ட மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் கனமழை பெய்தது.
நாகை மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் பரவலாக கனமழை பெய்ததால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நேற்று(நவ. 17) மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியாா் பள்ளிகளுக்கும் விடுமுறை அளித்த ஆட்சியர் ப. ஆகாஷ் உத்தரவிட்டார்.
இந்த நிலையில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் மழையின் தாக்கம் குறைந்துள்ளதால், பள்ளி, கல்லூரிகள் இன்று (நவ. 18) வழக்கம்போல செயல்படும் என்று நாகை மாவட்ட ஆட்சியர் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளார்.
தொடர் மழை காரணமாக, விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை, 18 மாவட்டங்களில் மழை தொடரும்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.