தவெக தலைவர் விஜய், கரூரில் பிரசாரம் மேற்கொண்டபோது கூட்ட நெரிசல் ஏற்பட்டு 41 பேர் பலியான நிலையில், பிரசாரத் திட்டத்தை ரத்து செய்திருந்த நிலையில், சேலத்திலிருந்து மீண்டும் தொடங்கவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அண்மையில், சென்னையில் நடைபெற்ற தவெக சிறப்புப் பொதுக் குழு கூட்டம் மற்றும் செயற்குழு கூட்டத்தில் விஜய் பங்கேற்று பேசுகையில், தன்னுடைய அரசியல் பயணம் இன்னும் வேகமாக இருக்கும் என்று அறிவித்திருந்தார்.
அப்போதே, கூட்டத்தில் பங்கேற்றிருந்த சில நிர்வாகிகள், சேலத்திலிருந்து மீண்டும் பிரசாரத்தைத் தொடங்குமாறு விஜய்யிடம் விருப்பம் தெரிவித்திருந்ததாகவும் கூறப்படுகிறது.
அது குறித்து பரிசீலிக்கப்பட்டு, தற்போது சேலத்திலிருந்து தவெக தலைவர் விஜய், தன்னுடைய பிரசாரத்தைத் தொடங்கவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதாவது, தமிழக வெற்றிக் கழகம் சார்பில், டிசம்பர் 4ஆம் தேதி சேலத்தில் பிரசாரம் மேற்கொள்ள சேலம் மாநகர காவல் ஆணையரிடம் தவெக நிர்வாகிகள் அனுமதி கேட்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
அதன்படி, சேலத்தில் போஸ் வளாகம், கோட்டை வளாகம் உள்ளிட்ட சில இடங்களைத் தேர்வு செய்து, அதில் ஒன்றில் பிரசாரம் செய்துகொள்ள அனுமதிக்குமாறு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
காவல்துறை அனுமதி வழங்கும் நிலையில், பிரசாரக் கூட்டத்தை நடத்துவதற்கான ஏற்பாடுகளையும் கட்சி நிர்வாகிகள் செய்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிக்க.. பிகார் முதல்வராக முதல் முறை பதவியேற்ற நிதீஷ் குமார் ஒரே வாரத்தில் பதவியிழந்தது ஏன்?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.