மு.க. ஸ்டாலின் 
தமிழ்நாடு

மெட்ரோ, எஸ்ஐஆர், நிதி நிராகரிப்பு... அனைத்துக்கும் எதிராக தமிழ்நாடு போராடும்: முதல்வர்

மத்திய பாஜக அரசுக்கு எதிராக கோவையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம் பற்றி முதல்வர் பதிவு...

இணையதளச் செய்திப் பிரிவு

எஸ்ஐஆர், தொகுதி மறுசீரமைப்பு, நிதி நிராகரிப்பு, ஹிந்தி திணிப்பு என அனைத்துக்கு எதிராகவும் தமிழ்நாடு போராடி வெல்லும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.

இதுபற்றி அவர் தனது எக்ஸ் பக்கத்தில்,

"தமிழ்நாட்டின் வளர்ச்சியைத் தடுக்கும் தீய எண்ணமே உருவான மத்திய பா.ஜ.க. அரசுக்கு எதிராகக் கோவையில் திரண்ட மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி!

கோவை, மதுரை மாநகரங்களுக்கான மெட்ரோ திட்டம் நிராகரிப்பு, எஸ்ஐஆர் மூலம் வாக்குரிமை பறிப்பு, தொகுதி மறுசீரமைப்பு மூலம் தமிழ்நாட்டின் தொகுதி குறைப்பு, மக்களாட்சி மாண்பை மதிக்காத ஆளுநரின் அடாவடி, நிதி ஒதுக்கீட்டு ஓரவஞ்சனை, உழவர்களுக்கு உதவி மறுப்பு, தமிழ்மொழி மீதான தாக்குதல், ஹிந்தித் திணிப்பு என அனைத்துக்கும் எதிராகத் தமிழ்நாடு போராடும் தமிழ்நாடு வெல்லும்!" என்று பதிவிட்டுள்ளார்.

முன்னதாக, மக்கள்தொகை குறைவாக இருப்பதால் கோவை மற்றும் மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களை மத்திய அரசு நிராகரித்துள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கோவை - மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களை மத்திய பாஜக அரசு நிராகரித்து தமிழ்நாட்டு மக்களுக்கு அநீதி இழைக்கிறது என திமுக குற்றம் சாட்டியுள்ளது.

மத்திய பாஜக அரசைக் கண்டித்து மதசார்பற்ற முற்போக்குக் கூட்டணி கட்சிகள் சார்பில் கோவையில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

MK stalin x post on dmk protest against central BJP government

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

போர்நிறுத்தத்தை மீறும் இஸ்ரேல்! காஸாவில் மீண்டும் தாக்குதல்; 33 ஆக அதிகரித்த உயிர்ப் பலிகள்!

2014-ல் பிரதமர் பதவிக்கு மோடியை நிராகரித்தவரா நிதீஷ் குமார்?

குடியரசுத் தலைவர், ஆளுநருக்கு காலக்கெடு விதிக்க முடியாது! உச்ச நீதிமன்றம் | SC | RN Ravi

காபி குடிப்பது ஆயுளை அதிகரிக்குமா? தினமும் எவ்வளவு குடித்தால் நல்லது?

வொண்டர் வுமன்.. நித்யா மேனன்!

SCROLL FOR NEXT