சென்னை: கிழக்கு திசையிலிருந்து வீசும் காற்றின் வேகம் காரணமாக தமிழகத்தின் தென் மாவட்டங்களில் பரவலாக மழை கிடைக்கும், தமிழகத்துக்குள் ஈரப்பதமான காற்று தள்ளப்படும் என்று பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
மழை உள்ளிட்ட வானிலை நிலவரங்களை முன்கணித்து தன்னுடைய சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வரும் தமிழ்நாடு வெதர்மேன் என அறியப்படும் பிரதீப் ஜான் இன்று காலை பதிவிட்டிருக்கும் தகவலில், தமிழகத்துக்கு நாளை காலை வரை மிக கனமழை, அதி கனமழைக்கு வாய்ப்பில்லை என்று தெளிவுபடுத்தியிருக்கிறார்.
மேலும் அவர் பதிவிட்டிருப்பதாவது, தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களில் மிதமான மழையும், வட கடலோர மாவட்டங்களான சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் லேசான மழையும் பெய்யும்.
நாளை காலை 8.30 மணி வரை, தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்கள் மற்றும் விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமான மழை பதிவாகும்.
நேற்றை அளவை விட இன்று டெல்டா மாவட்டங்களில் நல்ல மழை இருக்கும்.
தேனி, மதுரை, கன்னியாகுமரி, விருதுநகர், திண்டுக்கல், சிவகங்கை, புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சை, பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, நாமக்கல், கரூர், நீலகிரி, ஈரோடு, கோவை, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களிலும் மிதமான மழை பெய்யும்.
கனமழையைப் பொறுத்தவரை மயிலாடுதுறை, திருவாரூர், நாகை, தூத்துக்குடி, ராமநாதபுரம், நெல்லை, தென்காசி பகுதிகளில் கனமழைக்கு வாயப்பு உள்ளது.
நாளை காலை 8.30 மணி வரை மிக கனமழையும், அதி கனமழையும் பெய்யும் வாய்ப்பில்லை.
அடுத்த வாரத்தில் அதாவது நவ. 29 வாக்கில் உருவாகவிருக்கும் புயல் சின்னம் குறித்து கணிக்க இன்னும் நேரம் உள்ளது. எளிமையாகச் சொல்ல வேண்டும் என்றால், அந்த புயல் சின்னம் வலுவடைந்தால் சென்னை உள்ளிட்ட அண்டை மாவட்டங்களுக்கு ஒரு சொட்டு மழை கூட கிடைக்காது, பலவீனமடைந்தால் சென்னைக்கு நல்ல மழை கிடைக்கும் என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க.. இளையராஜா பெயர், படத்தை வணிக நோக்கத்துடன் பயன்படுத்த இடைக்காலத் தடை!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.