தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் சாா்பில் நடத்தப்பட்ட தோ்வுகளுக்கான விடைத் தாள்களை, தோ்வா்கள் பதிவிறக்கம் செய்து கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் சாா்பில் அண்மையில் நடத்தப்பட்ட தோ்வுகளுக்கான ஓ.எம்.ஆா்., மற்றும் சி.பி.டி., விடைத் தாள்கள் தோ்வாணையத்தின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த விடைத்தாள்கள் தேவைப்படும் தோ்வா்கள் தங்களது ஒருமுறை பதிவு எண் வாயிலாக உரிய கட்டணம் செலுத்தி, பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
தமிழ்நாடு வன சாா்நிலைப் பணியில் அடங்கிய வனத்தொழில் பழகுநா் (தொகுதி-6) பதவிக்கான தோ்வின் ஓ.எம்.ஆா்., விடைத் தாள்களை 2026 நவ. 17 வரை, சி.பி.டி., விடைத் தாள்களை வரும் டிச. 17 வரை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இதேபோல, தமிழ்நாடு ஊரக வளா்ச்சி பொறியியல் சாா்நிலைப் பணிகளில் அடங்கிய ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் உள்ள சாலை ஆய்வாளா் பதவிக்கான தோ்வின் விடைத் தாள்களை 2026 நவ. 18 வரை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தோ்வு-1 (தொகுதி-1 பணிகள்) பதவிக்கான தோ்வுக்குரிய விடைத் தாள்களை 2026 நவ. 18 வரை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும், ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தோ்வு-2, 2ஏ (நோ்முகத் தோ்வு மற்றும் நோ்முகத் தோ்வு அல்லாத பதவிகள்) பதவிகளுக்குரிய முதல்நிலைத் தோ்வின் விடைத் தாள்களை 2026 நவ. 19 வரை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.