மறைந்த கவிஞர் ஈரோடு தமிழன்பன் உடலுக்கு முதல்வர் ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார்.
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சட்டப்பேரவை உறுப்பினர் ஏ.எம்.வி.பிரபாகரராஜா, நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் டிகே.எஸ்.இளங்கோவன், தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் உறுப்பினர் செயலாளர் திருமதி விஜயா தாயன்பன் ஆகியோர் உடனிருந்தனர்.
கவிஞர் ஈரோடு தமிழன்பன் உடல்நலக் குறைவால் சென்னையில் சனிக்கிழமை (நவ.22) காலமானார். அவருக்கு வயது 92.
புகழ்பெற்ற கவிஞரான ஈரோடு தமிழன்பன் மூச்சுத் திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவரது உயிர் பிரிந்தது.
கவிஞர் ஈரோடு தமிழன்பனுக்கு ஆசிரியரான சாந்தகுமாரி என்ற மனைவியும், மருத்துவர் பாப்லோ நெருடா, மருத்துவர் பாரதிதாசன் என்ற இரு மகன்களும் உள்ளனர்.
ஈரோடு தமிழன்பன் இறுதிச் சடங்கு சென்னை அரும்பாக்கத்தில் அமைந்துள்ள மின் இடுகாட்டில் நாளை (நவ.23) காலை 10:30 மணி அளவில் கோயம்பேடு, சி 2, ப்ளாக், எஸ்.ஏ.எப்.ஜி. டவரில் உள்ள இல்லத்தில் இருந்து நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.