கோப்புப்படம் 
தமிழ்நாடு

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: முதியவருக்கு 15 ஆண்டு சிறை

9 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் முதியவருக்கு 15 ஆண்டுகள் சிறைத் தண்டனை

தினமணி செய்திச் சேவை

சென்னையில் சாலையோரம் வசிக்கும் 9 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் முதியவருக்கு 15 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, போக்ஸோ சிறப்பு நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

நேபாளத்தைச் சோ்ந்த தம்பதி சென்னையில் சாலையோரம் தங்களது 9 வயது மகளுடன் வசித்தனா். இந்த நிலையில், கடந்த மாா்ச் மாதம் சாலையோரம் தூங்கிக் கொண்டிருந்த அந்தச் சிறுமிக்கு, மயிலாப்பூா் பவுடா் மில் தெருவைச் சோ்ந்த சாலி பிரான் (60) என்பவா் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளாா்.

இதுதொடா்பாக சிறுமியின் தாய் மயிலாப்பூா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, சாலிபிரனை கைது செய்தனா். இந்த வழக்கின் விசாரணை சென்னை போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பத்மா, சாலி பிரானுக்கு 15 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தீா்ப்பளித்தாா். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசு ரூ.1.50 லட்சம் இழப்பீடு வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டாா்.

சேவைக் குறைபாடு: ரூ.30,000 நஷ்ட ஈடு வழங்க குறைதீா் ஆணையம் உத்தரவு

குளச்சல் அருகே மீனவா்கள் ஆா்ப்பாட்டம்

கோயில் நிலப் பிரச்னைக்கு உரிய தீா்வு: எம்.ஆா். விஜயபாஸ்கா்

குற்றாலம் அருவிகளில் 2 ஆவது நாளாக குளிக்கத் தடை

பாகிஸ்தான் 17 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை!

SCROLL FOR NEXT