இந்திய பங்குச் சந்தைகளான நிஃப்டி 50 மற்றும் தேசியப் பங்குச் சந்தையான சென்செக்ஸ் இரண்டும் உயர்வுடன் வணிகத்தைத் தொடங்கின.
இன்று காலை பங்குச் சந்தைகள் தொடங்கியதும் நிப்ஃடி 33 புள்ளிகள் உயர்ந்து 26,100 புள்ளிகளுடனும் சென்செக்ஸ் 100 புள்ளிகள் உயர்ந்து 85,317 புள்ளிகளுடன் வர்த்தகமாகின.
சர்வதேச அளவில் நிலவும் நேர்மறையான காரணங்கள், பங்குச் சந்தையில் எதிரொலித்துள்ளது.
பங்குச் சந்தைகள் இந்த வாரம் ஒரு நிலையான வணிகத்தை எதிர்கொள்ளும் என்று சந்தை நிபுணர்கள் கணித்திருக்கிறார்கள். அந்த கணிப்புக்கு ஏற்ப, இன்று காலை வணிகம் உயர்வுடன் தொடங்கியிருக்கிறது. இது இந்த வாரம் வரை தொடருமா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.
இந்தியா - அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்பந்தம் எப்போது வேண்டுமானாலும் கையெழுத்தாகலாம் என்ற எதிர்பார்ப்பு, பங்குச் சந்தைகளில் எதிரொலிக்கலாம் என்று கூறப்படுகிறது. முதலீட்டாளர்கள் பெரிய மூலதனம் மற்றும் மத்திய மூலதன நிறுவனப் பங்குகள் மீது கவனம் செலுத்தலாம் என்றும் நிபுணர்கள் அறிவுரை வழங்கியிருக்கிறார்கள்.
இதையும் படிக்க.. அம்பத்தூர் தொழிற்பேட்டை பேருந்து நிலையம்! திறந்து வைத்தார் உதயநிதி!!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.