வடக்கும் தெற்கும் ஒருசேர வளரும் சென்னையின் சீரான வளர்ச்சியை திராவிட மாடல் அரசு உறுதிசெய்யும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மேம்படுத்தப்பட்ட அம்பத்தூர் தொழிற்பேட்டை பேருந்து நிலையம் திறப்பு குறித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட எக்ஸ் தளப் பதிவில், மருத்துவமனைகள், முதல்வர் படைப்பகங்கள், குடியிருப்புகள், புதிய பேருந்து நிலையங்கள் என வடசென்னையின் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளித்து நாம் ஆற்றி வரும் பணிகளில் மற்றுமொரு புதிய வரவு மேம்படுத்தப்பட்ட அம்பத்தூர் தொழிற்பேட்டை பேருந்து நிலையம்!
1967-இல் முத்தமிழறிஞர் கலைஞரால் திறந்து வைக்கப்பட்ட இப்பேருந்து நிலையத்தின் மேம்பாட்டுப் பணிகளை கடந்த ஆண்டு மார்ச் மாதம் நான் அடிக்கல் நாட்டித் தொடங்கி வைத்திருந்தேன். இன்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்துள்ளார்.
விரைந்து பணிகளை முடித்த அமைச்சர் பி.கே. சேகர்பாபு-க்குப் பாராட்டுகள்! “வடக்கும் தெற்கும் ஒருசேர வளரும் சென்னையின் சீரான வளர்ச்சியை திராவிட மாடல் அரசு உறுதிசெய்யும்! இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
சென்னையை அடுத்த அம்பத்தூர் தொழிற்பேட்டையில் ரூ.14 கோடியில் கட்டி முடிக்கப்பட்டுள்ள பேருந்து நிலையத்தை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திங்கள்கிழமை திறந்து வைத்தார்.
அம்பத்தூர், ஆவடி மற்றும் மாதவரம், வில்லிவாக்கம், தாம்பரம் என பல ஊர்களுக்கும் அம்பத்தூர் எஸ்டேட் பேருந்து நிலையத்திலிருந்து பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இது தொழிற்சாலைப் பகுதி என்பதால் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பயன்படுத்தும் பேருந்து நிலையமாகவும் இது அமைந்துள்ளது.
இங்கு, ஓட்டுநர், நடத்துநருக்கு ஓய்வு அறைகள் உள்பட பல்வேறு வசதிகளுடன் ரூ. 14 கோடியில் கட்டப்பட்டுள்ள அம்பத்தூர் தொழிற்பேட்டை பேருந்து நிலையம் திறந்து வைக்கப்பட்டுள்ளதன் மூலம், பல ஆயிரக்கணக்கான மக்கள் ஒரே இடத்திலிருந்து பேருந்துகளில் பயணிக்கும் நிலை உருவாகியிருக்கிறது.
வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கிழ் சிஎம்டிஏ சார்பில் நவீன வசதிகளுடன் அம்பத்தூர் தொழிற்பேட்டை புதிய பேருந்து நிலையம் கட்டி முடிக்கப்பட்டு, இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.