தென்காசியில் தனியார் பேருந்துகள் மோதிக்கொண்ட விபத்தில் பலியானேரின் குடும்பத்தினருக்கு தவெக தலைவர் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது என்ஸ் தளத்தில், தென்காசி மாவட்டம், கடையநல்லூர் அருகே தனியார் பேருந்துகள் மோதிக்கொண்ட விபத்தில், பெண்கள் உள்பட 6 பேர் உயிரிழந்த செய்தி, மிகுந்த மன வேதனையை அளிக்கிறது.
அவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
விபத்தில் படுகாயம் அடைந்தவர்கள் பூரணமாகக் குணமடையும் வகையில், தேவையான அனைத்து மருத்துவ வசதிகளையும் ஏற்படுத்தி, உயர்தரமான சிகிச்சை அளிக்க வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் வட்டம், இடைக்கால் கிராமம், திருமங்கலம் -கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் எதிரெதிரே வந்த 2 தனியார் பேருந்துகள் திங்கள்கிழமை மோதி விபத்து ஏற்பட்டது.
தென்காசியில் இருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் சென்ற தனியார் பேருந்தும் கோவில்பட்டியில் இருந்து தென்காசி வந்த தனியார் பேருந்தும் நேருக்கு நேர் மோதியதில் பேருந்தின் முன்பாகம் முழுவதும் சேதமடைந்தது.
இந்த விபத்தில் 5 பெண்கள் உள்பட 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 50-க்கும் மேற்பட்டோர் தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை மற்றும் கடையநல்லூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.