கோப்புப்படம் ENS
தமிழ்நாடு

இதுவரை 6.16 கோடி பேருக்கு படிவம் வழங்கப்பட்டுள்ளது: தலைமை தேர்தல் அதிகாரி பேட்டி

தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் பேட்டி

இணையதளச் செய்திப் பிரிவு

தமிழ்நாட்டில் இதுவரை 6.16 கோடி வாக்காளர்களுக்கு படிவங்கள் வழங்கப்பட்டு இருப்பதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார்.

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் தொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் அரசியல் கட்சிகளுடன் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை மேற்கொண்டார்.

இதன்பின்னர் செய்தியாளர்களுடன் பேசிய அவர்,

தமிழகத்தில் எஸ்.ஐ.ஆர். பணிகளுக்கு கணக்கீட்டுப் படிவம் வழங்கும் பணிகள் டிச. 4 வரை தொடரும். அனைவரும் கண்டிப்பாக படிவத்தை நிரப்பித் தர வேண்டும். முடிந்தவரை தகவல்களை நிரப்பி கொடுக்க வேண்டும்.

இதுவரை 6.16 கோடி வாக்காளர்களுக்கு படிவங்கள் வழங்கப்பட்டுள்ளன. 50% படிவங்கள் நிரப்பிய நிலையில் திருப்பி பெறப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டில் இந்த பணிகளில் 83,256 அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். இதில் 68,000 பேர் பிஎல்ஓக்கள். மேலும் 33,000 தன்னார்வலர்கள், 2,45,340 கட்சி ஏஜெண்டுகள் இந்த பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் எஸ்ஐஆர் பணிகளில் அதிகம் பேர் ஈடுபட்டுள்ளனர்.

தகுதியுள்ள ஒவ்வொரு குடிமகனும் வாக்காளர் பட்டியலில் இருக்க வேண்டும். வரைவு பட்டியலில் இடம்பெறாதவர்கள் வாக்காளர் பட்டியலில் சேர்க்க உரிய அவகாசம் சேர்க்கப்படும்.

வரைவு வாக்காளர் பட்டியல் வெளியான பிறகு விடுபட்டவர்கள் கண்டிப்பாக சேர்க்கப்படுவார்கள். ஆன்லைனில் படிவங்கள் பெறப்பட்டு வருகின்றன. கணக்கீட்டுப் படிவங்களில் தகவல்கள் சரியாக இருந்தால் எந்த படிவமும் நிராகரிக்கப்பட்டது. யாருடைய பெயரையும் காரணமின்றி நீக்க முடியாது. பட்டியலில் இருந்து நீக்கப்பட்டால் கண்டிப்பாக காரணம் தெரிவிக்கப்படும். எஸ்ஐஆர் பணிகளுக்கு கூடுதல் கால அவகாசம் வாய்ப்பில்லை" என்று பேசினார்.

Tamil Nadu Chief Electoral Officer Archana Patnaik press meet on SIR

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிக் பாஸ் 9: வெளியேறிய கெமிக்கு கண்ணாடியை பரிசளித்த விஜய் சேதுபதி!

தந்தைக்கு மகள்கள் அளித்த பரிசு...

எழுத்தாளர்களுக்கு கட் அவுட்!

பரதநாட்டியம்... நவ்யா நாயர்!

தில்லி உயிரியல் பூங்காவிற்கு மீண்டும் திரும்பிய நரிகள்!

SCROLL FOR NEXT