திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் காா்த்திகை தீபத் திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
திருவண்ணாமலையில் உள்ள அருணாசலேஸ்வரர் கோவில், பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்குகிறது. இந்த கோவிலில் நடைபெறும் கார்த்திகை தீபத் திருவிழா உலக பிரசித்தி பெற்றதாகும்.
இந்தாண்டு காா்த்திகை தீபத் திருவிழா வருகின்ற டிசம்பா் 3-ஆம் தேதி மிக பிரமாண்டமாக நடைபெறவுள்ளது. இந்த விழாவிற்கு வெளிநாடு, வெளி மாநிலம் மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து அதிகளவில் பக்தா்கள் வருவாா்கள் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.
இந்த நிலையில், அருணாசலேஸ்வரர் கோவிலில் காா்த்திகை தீபத் திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. தங்க முலாம் பூசப்பட்ட 63 அடி உயரக் கொடிமரத்தில் மேள, தாளங்கள் முழங்க, கொடியேற்றப்பட்டது.
இந்த நிகழ்வில் திரளான சிவபக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
10 நாள்கள் நடைபெறும் இந்த திருவிழாவின் கடைசி நாளான டிசம்பர் 3-ஆம் தேதி அதிகாலை கோவிலில் பரணி தீபமும், மாலை கோவில் பின்புறமுள்ள 2,668 அடி உயரம் கொண்ட அண்ணாமலையார் கோயிலின் மலை உச்சியில் மகா தீபமும் ஏற்றப்படும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.