மதுரையில் நடைபெற்று வரும் எஸ்.ஐ.ஆர் பணிகள் குறித்து எங்களுக்கு ஒன்றுமே புரியவில்லை என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.
மதுரை மாவட்ட ஆட்சியர் பிரவீன் குமாரை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு கணக்கெடுப்பு குறித்து கோரிக்கை மனுவினை அளித்தார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து செல்லூர் ராஜு கூறுகையில், எஸ்.ஐ.ஆர் கணக்கெடுப்பில் வாக்குச்சாவடி அலுவலர்கள் முழுமையாக செயல்படவில்லை, ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வாக்குச்சாவடி அலுவலர்கள் கணக்கெடுப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.
சத்துணவு ஆயாக்கள், தூய்மைப் பணியாளர்கள் எஸ்.ஐ.ஆர் கணக்கெடுப்பில் ஈடுபடுத்தப்பட்டு வருகிறார்கள்.
மதுரையில் நிறைய பகுதிகளில் எஸ்.ஐ.ஆர் கணக்கெடுப்பு படிவம் வழங்கப்படவில்லை. வாக்காளரிடம் வழங்கப்பட்ட எஸ்.ஐ.ஆர் படிவங்கள் நிறைய இடங்களில் திரும்பப்பெறவில்லை.
மதுரை மேற்கு சட்டப்பேரவைத் தொகுதியில் 284 வாக்குச்சாவடிகளில் எஸ்.ஐ.ஆர் படிவங்கள் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மதுரை மாவட்டத்தில் நடைபெற்று வரும் எஸ்ஐஆர் பணிகள் குறித்து எங்களுக்கு ஒன்றுமே புரியவில்லை.
ஒருசில வாக்குகளை மட்டும் எடுத்துவிட்டு அத்தனை வாக்குகளையும் வாக்காளர் பட்டியலில் பதிவேற்றம் செய்வதற்காக மாவட்ட நிர்வாகம் செயல்படுகிறதோ என்கிற அச்சம் வருகிறது.
மதுரை மாவட்டத்தில் உள்ள 10 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் என அமைச்சர் மூர்த்தி கூறி வருகிறார்.
போலி வாக்காளர்களை வைத்து திமுக வெற்றி பெற திட்டமிட்டுள்ளது. எஸ்.ஐ.ஆர் கணக்கெடுப்பில் மாவட்ட நிர்வாகம் குழப்பங்களை ஏற்படுத்தி வருகிறது.
தேர்தல் ஆணையத்தின் நோக்கத்தை சிதைக்கும் வண்ணம் ஆளும் கட்சி மோசடியில் ஈடுபட்டு வருகிறது எனத் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.