முகப்பு
தமிழ்நாடு

விஜய்யை ஏதாவது கல்லூரிக்கு வேண்டுமானால் முதல்வர் ஆக்கலாம்: செல்லூர் ராஜு

விஜய்யை ஏதாவது கல்லூரிக்கு வேண்டுமானால் முதல்வர் ஆக்கலாம் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.

Updated On : 9 பிப்ரவரி, 2026 at 8:29 AM
முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு.
பகிர்:

விஜய்யை ஏதாவது கல்லூரிக்கு வேண்டுமானால் முதல்வர் ஆக்கலாம் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.

மதுரை மேற்கு சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட அச்சம்பத்து எஸ் ஆர் வி நகரில் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 42 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்படவுள்ள தார் சாலை அமைக்கும் பணிக்கு பூமி பூஜை இன்று நடத்தப்பட்டது. இதில் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு கலந்து கொண்டார்.

பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், செங்கோட்டையன் செல்லாத நோட்டு. அவர் ஆயிரம் பேசுவார். விஜய்யை எந்த நாட்டுக்கு முதல்வராக்க போகிறார் செங்கோட்டையன்? ஏதாவது கல்லூரிக்கு வேண்டுமானாலும் முதல்வர் ஆக்கலாம். எல்லோரும் தன்னை எம்.ஜி.ஆர்., என சொல்லிக் கொள்ளலாம். மக்கள் ஏற்க மாட்டார்கள்.

தூய்மையின் பிறப்பிடம் ஆதவ் அர்ஜுனா. நாட்டுக்காக தியாகம் செய்த குடும்பம் அது. அவர் பேச வேண்டியதுதான். தேர்தலுக்கு பின்னர் தவெக என்னவாக போகிறது என்பது இப்போதே தெரிகிறது. ஆதவின் பேச்சை விஜயின் ரசிகர்கள் ரசிக்கலாம், மக்கள் ரசிக்க மாட்டார்கள். இவ்வாறு கூறினார்.

summary

ADMK Former Minister Sellur Raju criticized tvk vijay.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.