முகப்பு
தமிழ்நாடு

மேட்டூர் அணை நீர் வரத்து அதிகரிப்பு!

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு செவ்வாய்கிழமை காலை வினாடிக்கு 5,223 கன அடியிலிருந்து வினாடிக்கு 6,414 கன அடியாக அதிகரித்துள்ளது.

Updated On : 25 நவம்பர், 2025 at 3:35 AM
மேட்டூர் அணை - கோப்புப் படம்
பகிர்:

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு செவ்வாய்கிழமை காலை வினாடிக்கு 5,223 கன அடியிலிருந்து வினாடிக்கு 6,414 கன அடியாக அதிகரித்துள்ளது.

அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு அணை மின் நிலையம் வழியாக வினாடிக்கு 1,000 கனஅடி நீரும் கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு மேல்மட்ட மதகுகள் வழியாக வினாடிக்கு 400 கனஅடி நீரும் திறக்கப்பட்டு வருகிறது.

அணைக்கு வரும் நீரின் அளவை விட பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு குறைவாக இருப்பதால் மேட்டூர் அணை நீர்மட்டம் 113.53 அடியிலிருந்து 113.81 அடியாக உயர்ந்தது. நீர் இருப்பு 83.94 டி எம்சியாக உள்ளது.

summary

The amount of water entering the Mettur Dam has increased from 5,223 cubic feet per second to 6,414 cubic feet per second on Tuesday morning.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.