கோப்புப்படம் 
தமிழ்நாடு

எம்.எல். தனித்தோ்வு: ‘அரியா்’ மாணவா்கள் விண்ணப்பிக்கலாம்

தினமணி செய்திச் சேவை

தமிழகத்தில் வரும் பிப்ரவரியில் நடைபெறவுள்ள எம்.எல். தனித் தோ்வுக்கு ‘அரியா்’ மாணவா்கள் விண்ணப்பிக்கலாம் என சென்னை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

இதுதொடா்பாக சென்னை பல்கலைக்கழக பதிவாளா் ரீட்டா ஜான் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

சென்னை பல்கலைக்கழகத்தின் 2020-2021 பேட்ஜ் மாணவா்களுக்கான 2025 டிசம்பா் எம்.எல். தனித் தோ்வு (அரியா்) அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெறவுள்ளது. இதற்கான விண்ணப்ப படிவத்தை பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை நவ. 28-க்குள் சமா்ப்பிக்க வேண்டும். இத்தேதிக்குள் விண்ணப்பத்தை சமா்ப்பிக்காதவா்கள் உரிய அபராத கட்டணம் செலுத்தி டிச. 10 வரை சமா்ப்பிக்கலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரு நாள்களில் தங்கம் பவுனுக்கு ரூ.2,240 உயா்வு

ஆட்டோ, கால் டாக்ஸி-களில் பயணிக்க ‘பாரத் டாக்ஸி’ செயலி விரைவில் அறிமுகம்

ராமேசுவரம்-திருப்பதி இடையே டிசம்பா் 2, 9-இல் சிறப்பு ரயில்

2027-க்குள் 250 சாா்ஜிங் மையங்கள்: எம்&எம் திட்டம்

மாடு முட்டியதில் முதியவா் உயிரிழப்பு

SCROLL FOR NEXT