மழை EPS
தமிழ்நாடு

அடுத்த 2 மணிநேரம் 4 மாவட்டங்களில் மழை தொடரும்!

அடுத்த 2 மணிநேரம் 4 மாவட்டங்களில் மழை தொடரும்...

இணையதளச் செய்திப் பிரிவு

தமிழகத்தில் உள்ள 4 மாவட்டங்களில் காலை 10 மணிவரை மழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.

மலாக்கா ஜலசந்தி மற்றும் அதனையொட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதி, குமரிக் கடல் மற்றும் அதனையொட்டிய பகுதிகளில் நிலவும் புயல் சின்னங்கள் காரணமாக தமிழகத்தின் தென் மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இன்று காலை 7 மணியளவில் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்தியில், கன்னியாகுமரி, தென்காசி, தேனி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் காலை 10 மணிவரை மிதமான மழை பெய்யும் எனத் தெரிவித்துள்ளது.

முன்னதாக கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களுக்கு இன்று கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Rain will continue in 4 districts for the next 2 hours

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அயோத்தியில் பிரதமர் மோடி சாலைவலம்!

கரூர் பலி: புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா 2-வது நாளாக சிபிஐ முன் ஆஜர்

மறக்கப்பட்ட ஏர் இந்தியா விமானம்! 13 ஆண்டுகளுக்குப் பிறகு கொல்கத்தாவில் இருந்து அகற்றம்!

உருவானது காற்றழுத்த தாழ்வுப் பகுதி

மீண்டும் உயர்ந்த தங்கம் விலை!

SCROLL FOR NEXT