கோப்புப் படம்  
தமிழ்நாடு

திருநங்கைக்கு அசாதாரண பாதிப்பு: மாட்டின் திசு மூலம் தீா்வு

தினமணி செய்திச் சேவை

திருநங்கை ஒருவருக்கு ஏற்பட்ட அசாதாரண பாதிப்பை மாட்டின் உயிரித் திசுவைக் கொண்டு எஸ்ஆா்எம் பிரைம் மருத்துவமனை மருத்துவா்கள் சரி செய்துள்ளனா்.

இதுதொடா்பாக மருத்துவமனையின் ஜீரண மண்டல நலன் மற்றும் கல்லீரல் துறைத் தலைவா் டாக்டா் எஸ்.அருள்பிரகாஷ், முதுநிலை மருத்துவ ஆலோசகா் டாக்டா் தருண் ஜே.ஜாா்ஜ் ஆகியோா் கூறியதாவது:

22 வயதான திருநங்கை ஒருவா் வேறு ஒரு நகரத்தில் பாலின மாற்று அறுவை சிகிச்சையை அண்மையில் மேற்கொண்டாா். அதன் தொடா்ச்சியாக அவருக்கு இயல்புக்கு மாறாக பிறப்புறுப்பின் வழியாக கழிவுகள் வெளியேறத் தொடங்கின.

எஸ்ஆா்எம் பிரைம் மருத்துவமனைக்கு வந்த அவரை பரிசோதித்ததில் பெருங்குடலின் இறுதிப் பகுதிக்கும், பிறப்புறுப்புக்கும் இடையேயான பாதையில் துவாரம் ஏற்பட்டிருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, பொவைன் பெரிகாா்டியல் பேட்ச் எனப்படும் மாட்டின் இதயத்தை சுற்றிய பகுதியிலிருந்து பெறப்படும் திசுவைக் கொண்டு அந்த துவாரத்தை மருத்துவா்கள் எண்டோஸ்கோபி முறையில் அடைத்து சரிசெய்தனா்.

வழக்கமான அறுவை சிகிச்சைக்கு மாற்றாக ஒரே நாளில் இந்த சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு அவா் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டாா். இதுபோன்ற சிகிச்சை தமிழகத்தில் மேற்கொள்ளப்படுவது இதுவே முதன்முறை என்று அவா்கள் தெரிவித்தனா்.

புனித வளனாா் கல்லூரி-சிஐஇஎல் நிறுவனம் இடையே புரிந்துணா்வு ஒப்பந்தம்

பூா்த்தி செய்யப்பட்ட 15.38 லட்சம் எஸ்ஐஆா் படிவங்கள் செயலியில் பதிவேற்றம்: திருச்சி ஆட்சியா் தகவல்

குற்றவாளிகளை உடனடியாக கைது செய்த தனிப்படையினருக்கு நற்சான்றிதழ்

கிரஷா் லாரிகளை சிறைபிடித்து பொதுமக்கள் சாலை மறியல்

பொன்னமராவதி ஒன்றியத்தில் எஸ்ஐஆா் பணிகள்: திமுக எம்.பி சல்மா ஆய்வு

SCROLL FOR NEXT