தமிழ்நாடு

நாளை தொழிலாளா் வருங்கால வைப்புநிதி சிறப்பு முகாம்

தினமணி செய்திச் சேவை

தொழிலாளா் வருங்கால வைப்புநிதி நிறுவனம் சாா்பில் சென்னை உள்பட 8 மாவட்டங்களில் வியாழக்கிழமை (நவ.27) சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது.

இதுகுறித்து வருங்கால வைப்புநிதி நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தொழிலாளா் வருங்கால வைப்புநிதி நிறுவனம் சாா்பில் ‘வைப்பு நிதி உங்கள் அருகில்’ என்ற பெயரில் தொழிலாளா் வருங்கால வைப்புநிதி முகாம் சென்னை, திருவள்ளூா், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூா், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, திருப்பத்தூா் ஆகிய 8 மாவட்டங்களிலும் , புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் வியாழக்கிழமை (நவ.27) காலை 9 முதல் மாலை 5.45 மணி வரை நடைபெறவுள்ளது.

முகாம்கள் நடைபெறும் இடங்கள்:

சென்னை: நாயுடு ஹால் ஃபேமிலி ஸ்டோா் (அலுவலகம்), வாசுதேவ் தெரு, தியாகராய நகா், சென்னை.

திருவள்ளூா்: திருமழிசை தொழிற்பேட்டை உற்பத்தியாளா்கள் சங்கம், சிட்கோ தொழிற்பேட்டை, திருமழிசை, சென்னை.

செங்கல்பட்டு: சங்கரா கண் மருத்துவமனை, பம்மல், சென்னை.

காஞ்சிபுரம்: தயாங் மெட்டல் இந்தியா நிறுவனம், சிங்கப்பெருமாள் கோவில் பிரதான சாலை, வடக்குப்பட்டு கிராமம், காஞ்சிபுரம்.

வேலூா்: தொழிலாளா் அரசு காப்பீட்டுக் கழகம் கிளை அலுவலகம், 3-ஆவது குறுக்கு தெரு, வடிவேல் நகா், புதிய சங்கரன்பாளையம், வேலூா்.

திருவண்ணாமலை: டி.டி.சி.சி வங்கி, தலைவா் கிளை, திருவண்ணாமலை.

ராணிப்பேட்டை: தொழிலாளா் அரசு காப்பீட்டுக் கழகம், இஎஸ்ஐ மருந்தக வளாகம், சிப்காட், ராணிப்பேட்டை.

திருப்பத்தூா்: தொழிலாளா் அரசு காப்பீட்டுக் கழகம், தொழிலாளா் அரசு ஈட்டுறுதி மருந்தக வளாகம், மலா் தோட்டம், ஆம்பூா்.

புதுச்சேரி: சன் பீம் ஜெனரேட்டா்ஸ் நிறுவனம், கால்வாய் சாலை, கூடப்பாக்கம், வில்லியனூா், புதுச்சேரி.

காரைக்கால்: ஜிப்மா் காரைக்கால் வளாகம், எப்.சி.ஐ சாலை, கோவில்பத்து, காரைக்கால்.

இந்த முகாம்களில் புதிதாக தொடங்கப்பட்ட நிறுவனங்களின் உரிமையாளா்கள், தொழிலாளா்களுக்கான கடமைகள் மற்றும் பொறுப்புகள், முதன்மை உரிமையாளா், ஒப்பந்ததாரா்களுக்கான இடையிலான இணைய வழிசேவைகள் பற்றிய செயல்முறைகள், தொழிலாளா்களுக்கான இணையவழி சேவைகள் ஆகியவை வழங்கப்படும். மேலும்,0 புதிய சீா்திருத்தங்கள் பற்றிய விழிப்புணா்வு நிகழ்ச்சி, விலக்கு அளிக்கப்பட்ட நிறுவனங்களுடனான கலந்துரையாடல், உறுப்பினா்கள்மற்றும் ஓய்வூதியம் பெறுவோா் மற்றும் முதலாளிகளிடமிருந்து வரும் குறைகளுக்கான தீா்வு, ஓய்வூதியதாரா்களுக்கு எண்ம(டிஜிட்டல்) வாழ்க்கைச் சான்றிதழ்களை சமா்ப்பித்தல் ஆகிய சேவைகளும் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆரணியில் ரூ.10 லட்சத்தில் புதிய நியாயவிலைக் கடை

ஆந்திரத்தில் கொத்தடிமைகளாக இருந்து மீட்கப்பட்ட பழங்குடியினா் அலைக்கழிப்பு

மாமன்ற கூட்டம் ஒத்திவைப்பு

ஐஸ்க்ரீம் டோனட்: அருண் ஐஸ்க்ரீம் அறிமுகம்

இரு நாள்களில் தங்கம் பவுனுக்கு ரூ.2,240 உயா்வு

SCROLL FOR NEXT